புதிய நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் எரிபொருள் விலையேற்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் - ரணில்

Published By: Digital Desk 3

21 Jul, 2021 | 12:18 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான திருத்தத்தை ஏன் முன்வைத்தேன் என்பதை நேற்று சபையில் தெளிவுபடுத்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, புதிய நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் எரிபொருள் விலையேற்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

சபாநாயகர் காலையில் விடுத்த அறிவிப்பு தொடர்பில் சில விடயங்களை நான் கூறவேண்டும், நிலையியல் கட்டளைக்கு அமைய நான் முன்வைத்த திருத்தங்கள் சகலருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எரிபொருள் விலையேற்றத்திற்கு பொறுப்புக்கூறவேண்டிய ஒரு நபரே அமைச்சர் கம்மன்பில. ஆனால் எரிபொருள் விலையேற்றத்தை அறிவிக்க வேண்டியது நிதி அமைச்சரேயாகும். 

எரிபொருள் விலையேற்றுவது குறித்து எமது அரசாங்கத்திலும், அதற்கு முன்னர் அரசாங்கத்திலும் நிதி அமைச்சரே தீர்மானம் எடுத்தார்.

இன்னமும் அந்த நிலைப்பாடு மாறவில்லை என்றே நான் நினைக்கின்றேன். ஆகவே நிதி அமைச்சரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். அதேபோல் இந்த விடயம் வாழ்க்கை செலவு பற்றிய உபகுழுவிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆகவே இந்த குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் இந்த பட்டியலில் வரவேண்டும்.

அதேபோல் மக்களின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தாதமை குறித்து நம்பிக்கையில்லா பிரேரணையில் கூறப்பட்டுள்ளது. இது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகல அமைச்சர்களினதும் கடமையாகும். 

இதற்கமைய நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமென்றால் சகல அமைச்சரவை அமைச்சர்களையும் இதில் உள்வாங்க வேண்டும். அதேபோல் வாக்குறுதிகளை வழங்கியமைக்கு அமைய செயற்படாத காரணத்தினால் புதிய நிதி அமைச்சரையும் இதில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

ஆனால் ஜனாதிபதியை நான் இதில் இணைத்துக்கொள்ளவில்லை, ஏனென்றால் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையே கொண்டுவர வேண்டும். 

ஆகவே அமைச்சரவையாக அல்லாது அமைச்சரவையில் உள்ள சகல அமைச்சர்களுக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர வேண்டும். இதனையே நான் பிரேரணையாக முன்வைத்தேன்.

சாகர காரியவசம் இது குறித்து தெரிவித்த கருத்தை அடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அன்று சாகர காரியவசம் இருந்த நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளதுடன் அரசாங்கமாக அவர்களின் பலத்தை வெளிப்படுத்த ஒன்றினைந்துள்ளனர். 

ஆகவே இவ்வாறான நிலையில் ஒட்டுமொத அமைச்சர்களுக்கும் எதிராகவே நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர வேண்டும். எனவே இதனை கருத்தில் கொண்டு உங்களின் தீர்மானத்தை அறிவிப்பீர்கள் என்றே நினைத்தேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37