நாளாந்த சம்பளமாக 1,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க தொழில் அமைச்சின் ஊடாக சட்ட மூலம் - ஜீவன்

Published By: Digital Desk 3

21 Jul, 2021 | 10:32 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தோட்ட முதலாளிமார்கள் சட்டத்திலுள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி பதிவு செய்யப்படாத தோட்டத் தொழிலாளர்களுக்கு 750 ரூபா சம்பளத்தை வழங்கி வருகின்றனர்.

அவர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கவும், தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,000 ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்காக தொழில் அமைச்சின் ஊடாக சட்ட மூலமொன்றை கொண்டுவரவுள்ளதாக தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க  அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

“முதலாளிமார் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் 1,000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தவறினால், அதற்கான தனியாக சட்டமொன்றை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இதற்காக நான் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அதாவது, எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதிக்குள் முதலாளிமார் சம்மேளத்துடன் இணக்கப்பாடு எட்டப்படவில்லையென்றால், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான சட்ட ஏற்பாடொன்றை கொண்டுவருமாறு தொழில் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

முதலாளிமார் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டு, பதிவு செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளமும், பதிவு செய்யப்படாத தோட்டத் தொழிலாளர்களுக்கு 750 ரூபா சம்பளமும் வழங்கி வருகின்றனர். மேலும், தற்போது பறிக்கப்படும் கொழுந்தின் நிறைகளையும் அதிகரித்துள்ளனர்.

மேலும், கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தற்போது நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து இறுதி முடிவு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளிவரும் என நம்புகிறேன். அதன் பின்னர், 1,000 ரூபா சம்பளம் தொடர்பில் சட்ட மூலமொன்றை கொண்டுவர முடியும்” என்றார்.

கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்வது குறித்து எமது சமூக மக்களுக்கு தவறான கருத்து நிலவுகிறது. இது குறித்து நாம் அவர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளோம். தற்போது ஆர்வத்துடன் பலர் வந்து கொவிட் தடுப்பூசிகளை பெற்று வருகின்றனர் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்துக்கு ஆரம்பத்தில் 25 ஆயிரம் கொவிட் தடுப்பூசிகளை மாத்திரமே தருவதாக கூறியிருந்தனர். எனினும், எமது மாகாண ஆளுநரின் கொவிட் தடுப்பு குழுவினருடன் பேச்சுவார்தை நடத்தி 50 ஆயிரம் தடுப்பூசிகளை ஆரம்பத்தில் பெற்றிருந்தோம். தற்போது நுவரேலியாவில், கொவிட் தடுப்பூசியின் ஒரு இலட்சத்து 68 ஆயிரம் பேர் பெற்றுக்கொண்டுள்ளனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96 சதவீதத்தினரும், 29 சதவீதமான சதவீமான ஆசிரியர்களும் கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31