சமூக விழுமிய நீதியைக் குறித்துக்காட்டும் ஹஜ் திருநாள் - எதிர்க் கட்சித் தலைவர் சஜித் வாழ்த்து

21 Jul, 2021 | 11:12 AM
image

சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் சமூகவாழ்வையும் உலகிற்கு எடுத்துக்காட்டுவதோடு இறைவனுக்கும் அடியார்களுக்கும் இடையிலான ஒரு தெய்வீகப் பிணைப்பை ஏற்படுத்தும் மகிமை மிக்க ஒரு நன்னாளாக ஹஜ் திருநாள் அமையட்டும் என ஏதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஏதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

இஸ்லாத்தில் கட்டாயக் கடமைகளில் இறுதிக் கடமையாக இருக்கின்ற இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காக புண்ணியமிக்க பூமிக்கு செல்வதையே ஹஜ் கடமையாக குறிப்பிடலாம். 

உலக வாழ் இஸ்லாமியர்கள் தியாகத்தையும் தயாளத் தன்மையையும் நினைவு கூர்வதாகவே கருத முடியும்.

இது சமத்துவத்தை அடிப்படையாக கட்டமைத்துள்ள சமூக விழுமிய நீதியைக் குறித்துக்காட்டுகின்றது. பேரழிவான ஒரு காலத்தில் சமத்துவம் என்பது முன்னெப்போதையும் விட தெளிவாக உணர முடிகின்றது. 

புனித மக்காவை கேந்திரமாக கொண்டு முழு உலகையும் நோக்கி சொல்லப்படும் இந்தச்  செய்தி மிக முக்கியமானது. 

நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனுக்காக தனது மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அறுத்துப் பலியிட எத்தனித்தமை தியாகத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் தியாக நாளாக ஹஜ் திருநாள் முஸ்லீம்களால் ஆன்மீக விழுமிய செய்தியை உலகிற்கு கொண்டு சேர்ப்பதற்கான உன்னத நோக்கோடு கொண்டாடப்படுகின்றது. 

இருப்பினும் தற்போதைய கொரோனா தொற்று பரவலாக காணப்படுகின்ற இந்த நிலையில் மத வழிபாடுகளை ஆரவாரமாக நடாத்த முடியத மன நிலையில் இருக்கின்றோம். 

உங்கள் உள்ளங்களை வழிபாட்டுத் தலங்களாக மாற்றிக்கொண்டு செயல்படுவதற்கு இந்த தொற்று நிலை எம்மை மாற்றியிருப்பதோடு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பெருநாள் கொண்டாட்டங்களை நடாத்துமாறு பணிவாக கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51