எரிபொருள் விலை அதிகரிப்பு தற்காலிகமானது என்கிறார் அமைச்சர் நாமல் 

Published By: Digital Desk 4

20 Jul, 2021 | 05:18 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

எரிபொருள் விலையையோ அத்தியாவசிய பொருட்களின் விலையையோ அரசாங்கம் விரும்பி அதிகரிப்பதில்லை.

மாறாக உலகளாவிய கொவிட் நெருக்கடியால் உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பின் காரணமாகவே நாமும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எந்தவொரு அரசாங்கமும் எரிபொருள் அல்லது அத்தியாவசிய பொருட்களின் விலைகளை விருப்பத்துடன் அதிகரிப்பதில்லை.

எரிபொருள் கூட்டுத்தாபனம் நட்டமடைந்து செல்வது காலாகாலமாக இடம்பெறும் பிரச்சினையாகும். இன்று நேற்று உருவானதல்ல இது 20, 30 வருடங்களாக நாம் எதிர்கொண்டுவரும் சவால்களாகும்.  

இது தற்காலிகமான அதிகரிப்பாகும். பொதுஜன பெரமுனவின் கருத்தையே அதன் பொதுச் செயலாளர் கூறியிருந்தார்.

அத்துடன் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை நாம் பாதுகாப்போம். நாட்டை சுபீட்சத்துக்கு கொண்டுசெல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய  ஆணையை  பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57