நீருக்கு கீழான சிறந்த ஆயுதங்களை சீனா ஏன் அதிகம் விரும்புகின்றது?

Published By: Digital Desk 2

20 Jul, 2021 | 05:02 PM
image

பீஜிங்கிற்கும், வொஷிங்டனுக்கும் இடையிலான கடுமையான இராணுவப்போட்டி அதிகரித்து வருகின்றது. இந்தப் போட்டிக்கு மத்தியில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ கடற்படையானது ஏவுகணைகளுடன் கூடிய நீர்மூழ்கி கப்பல் மூலமாக அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பினை தாக்குமளவிற்கு தமது 'தாக்குதல் திறனை' மேம்படுத்த ஆரம்பித்திருக்கின்றது. 

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் 72ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகளின்போது, Type 094A  அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஜின்,வகை அணுவாயுத பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாங்கிச் செல்லக்கூடிய நீர்மூழ்கி கப்பல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது என்று த சௌவுத் சைனா மோர்னிங் போர்ஸ்ட் அறிக்கையிட்டிக்கிறது. 

அதேநேரம், கடந்த 2020ஆம் ஆண்டு ஜின்,வகை அணுவாயுத பாலிஸ்டிக் ஏவுகணைகளை காவிச்செல்லக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல்கள் இரண்டை சீனா கடற்படையுடன் இணைத்துக்கொண்டதன் மூலமாக, மொத்தமாக ஆறு ஜின்,வகை அணுவாயுத பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் காவிச்செல்லவல்ல நீர்மூழ்கிக் கப்பல்கல்களை சீனா தற்போது தன்வசம் கொண்டுள்ளது. 

இந்த நீர்மூழ்கிக் கப்பல்களில் நவீன ராடர் வசதிகள், மேம்படுத்தப்பட்ட தானியங்கியின் வேகம், வினைதிறனான ஒலியியல் செயற்றிறன் மற்றும் விரிவாக்கப்பட்ட ஆயுதங்களின் தொகுதி என்பவற்றையும் கொண்டிருக்கின்றமை விசேட அம்சங்களாக குறிப்பிடப்படுகின்றது. 

Type 094A  நீர்மூழ்கிக் கப்பல் என்பது Type 094 என்ற நீர்மூழ்கிக் கப்பலின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். இது பாரிய சத்தங்களை வெளிப்படுத்தாது, சக்திவாய்ந்த ஜே.எல்-3 ஏவுகணையை காவிச்செல்லக்கூடியதாக உள்ளது என்று பாதுகாப்புத்துறையின் முக்கிய அதிகாரியொருவரை மேற்கோளிட்டு சௌத் சைனா மோர்னிங் போஸ்;ட் தகவல் வெளியிட்டிருந்தது. 

சீன கடற்படையால் ஜே.எல்-3 அல்லது ஜுலாங் என்று அழைக்கப்படும் ஏவுகணையானது பத்தாயிரம் கிலோமீற்றருக்கு அப்பாலான இலக்குகளை தாக்கி அழிக்கவல்லது.

அதுமட்டுமன்றி, சுயாதீனமாக இலக்குகளை தேடி அழிக்க வல்லது. மேலும் அது செலுத்தப்படும் தொகுதிக்கு மீளத்திரும்பும் திறன் கொண்டது என்று பாதுகாப்பு துறைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் நவீனத்துவங்களுடன் தயாரிக்கப்படவுள்ள Type 096 நீர்மூழ்கிக் கப்பலானது மேலும் சக்தி வாய்ந்த ஜின்,வகை அணுவாயுத பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாங்கிச் செல்லக்கூடியவாறே அமையவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் அது பல்துறை செயற்பாட்டுத் திறன்களைக் கொண்டிருக்கும் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

Type 096 நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கும் பணிகளை சீனா கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் ஆரம்பித்திருக்கலாம் என்று கணிக்கப்படுகின்றது.

எனினும் அதனை உறுதிப்படுத்துவதற்கு எவ்வழியிலும் முடிந்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் Type 096  நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பணிகள் நிறைவடைவதற்கு பல ஆண்டுகளாகலாம் என்று கூறப்படுகின்றது. 

Type 094A நீர்மூழ்கிக் கப்பல் மேம்படுத்தப்படுவதற்கு முன்னதாக அது ஜே.எல்-2 வகையைச் சேர்ந்த ஏவுகணைகளையே கொண்டிருந்தது. இது  அமெரிக்காவின் தழ்வான பகுதியாக கருதப்படும் வடகிழக்கு பகுதியையே தாக்கும் என்று கணிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த நீர்மூழ்கிக் கப்பல் மேம்படுத்தப்பட்டதன் பின்னர் அமெரிக்காவை முழுமையாக தாக்கவல்ல திறனைக் கொண்டிருப்பது மறைக்க முடியாத யதார்த்தமாகின்றது.

அதேநேரம் Type 094A நீர்மூழ்கி கப்பலானது ஜே.எல்-3 வகையைச் சேர்ந்த 16 ஏவுகணைகளை காவிச் செல்லவல்லதாக இருக்கும் அதேநேரம், புதிதாக உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படும் Type 096 நீர்மூழ்கிக் கப்பலானது ஜே.எல்-3 வகையைச் சேர்ந்த 24இற்கும் அதிகமான ஏவுகணைகளை காவிச்செல்லவல்லதாக அமையவுள்ளது. 

இதேநேரம் ஜே.எல்-3 வகையினைச் சேர்ந்த அணுவாயுத பாலிஸ்டிக் ஏவுகணையானது 10ஆயிரம் கிலோமீற்றர்கள் தொலைவிற்குச் சென்று தாக்கும் திறன் கொண்டவையாக காணப்படுகின்றது என்று சீனாவின் மக்கள் இராணுவ முன்னாள் பயிற்றுவிப்பாளரான சொங் ஜொங்பிங் சௌவுத் சைனா மோர்னிங் போர்ஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார். 

சீனாவைப் பொறுத்தவரையில் அணுவாயுதங்களை பயன்படுத்தமாட்டேன் என்று தொடர்ச்சியான உறுதிமொழிகளை வழங்கி வரும் அதேநேரம், சீனாவின் மக்கள் இராணுவக் கடற்படையுடன் போட்டியிடுபவர்களுக்கு எதிராக தனது பலத்தை அதிகரிக்கும் நோக்குடன் நவீன அணுவாயுத நீர்மூழ்கி கப்பலை மேம்படுத்துவதற்கு விளைகின்றது. 

ரஷ்ய பனிப்போர் காலத்தில் அதன் நட்பு நாடுகள் பயன்படுத்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றே சீனாவின் இரண்டாம் தலைமுறை அணுவாயுத  பாலிஸ்டிக்  ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒருவிதமான இரைச்சலுடன் கூய சத்தமும், இலக்குகளை சுயாதீமாக கண்டறிவதிலும் சில பின்னடைவுகளைக் கொண்டிருக்கின்றன. 

மேம்படுத்தப்பட்ட Type 094A நீர்மூழ்கி கப்பலின் திறன்கள் இன்னமும் முழுமை பெற்றுவிட்டன என்று கொள்ள முடியாதுள்ளது. அதன் இயக்கத்தில் மேலதிக மேம்பாடுகள் அவசியமாகவே உள்ளன.

அதற்காகவே தான் நவீனத்துவங்களை உள்வாங்கிய வகையில் உருவாக்கவுள்ள அடுத்த தலைமைமுறைக்கு ஏற்றவாறான அணுவாயுத  பாலிஸ்டிக்  ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் நீர்மூழ்கி கப்பலுக்காக பெருந்தொகையான முதலீடுகள் சீன அரசாங்கத்தினால் செய்யப்படுகின்றன. 

தற்போது சீனாவிடத்தில் எட்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் காணப்படகின்றன. அதில் 1980களில் உருவாக்கப்பட்ட Type 092 வகையை அல்லது ஷியா வகுப்பைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல் ஜே.எல்-1 ஏ ஏவுகணையை தாங்கிச் செல்லக்கூடிய இயங்கு நிலையில் உள்ளது.

அத்துடன் தற்போது  Type 094A நீர்மூழ்கி கப்பலே அதிகளவு வினைத்திறன் கொண்டதாகவும் அதிகளவான ஏவுகணைகளை காவிச்செல்லக் கூடியதாகவும் இருக்கின்றது. 

இந்த நீர்மூழ்க்கிக் கப்பல்கள் இயங்கு நிலையில் காணப்படுவதால் அவற்றின் செயற்பாடுகள் குன்றும் வரையில் சீனாவால் தொடர்ச்சியாக சேவையில் பயன்படுத்தப்படும். பின்னர் அவை படிப்படியாக அகற்றப்படும். 

அவ்வாறிருக்க, 2021ஆம் ஆண்டு முற்பகுதியில் சீனாவின் மக்கள் இராணுவ கடற்படையானது, Type 096 வகையைச் சேர்ந்த ஆகக்குறைந்தது ஆறு நவீன நீர்மூழ்கி கப்பல்களைக் நிர்மாணிக்கும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

அதுமட்டுமன்றி எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குள் பீஜிங்கானது ஆறு விமானம் தாங்கி போர்க் கப்பல்களை களமிறக்கும் இலட்சியத்துடன் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. ஆக, மொத்தத்தில் உலகம் அழிப்பாளர்களின் கூட்டாளர்களுக்கு மத்தியில் சுழலப்போகின்றது. 

த நஷனல் இன்ரஸ்ட் இணையத்திற்காக மார்க் எபிஸ்கோபோஸ்

தமிழில்: ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21