உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

Published By: Vishnu

20 Jul, 2021 | 10:24 AM
image

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

காலை 10.00 மணி முதமல் 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மு.ப. 11.00 முதல் மாலை 05.30 மணிவரை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் இடம்பெறவுள்ளது. 

அதனை அடுத்து நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

நாட்டில் அண்மையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டபோது, விலை அதிகரிப்பு மேற்கொண்டமைக்கு மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

விலை அதிகரிப்பை பொதுஜன பெரமுன ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனால் அவர் பதவி விலகவேண்டும் என தெரிவித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

குறித்த அறிக்கையின் அடிப்படையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அமைச்சர் உதய கம்மன்பில தன்னிச்சையாக செயற்பட்டு எரிபொருட்களின் விலை அதிகரிப்பை மேற்கொண்டிருக்கின்றார்.

அதனால் அவருக்கு எதிராக நம்பிக்கையல்லா பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர தீர்மானித்து, கடந்த மாதம் 22ஆம் எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10