இலங்கை - இந்திய போட்டி பாடசாலை மற்றும் பல்கலைக்கழக அணிக்கிடையேயான ஆட்டம் போல் இருந்தது - ரமிஸ் ராஜா

Published By: Vishnu

20 Jul, 2021 | 08:54 AM
image

இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பாடசாலை மற்றும் பல்கலைக்கழக அணிகளுக்கிடையிலான ஆட்டம் போல் இருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 36.4 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் ஒருநாள் தொடரில் இந்தியா 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதுடன், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

Image

இதனிடையே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ரமிஸ் ராஜா, முதல் ஒருநாள் போட்டியை பகுப்பாய்வு செய்துள்ளார்.

அதில் அவர் முதலாவது ஒருநாள் போட்டியை, இது ஒரு பல்கலைக்கழகத்திற்கும் பாடசாலை அணிக்கும் இடையிலான விளையாட்டு என்று கூறினார்.

ஆட்டத்தில் இந்தியர்கள் பல்கலைக்கழக வீரர்களைப் போல வலுவாக தோற்றமளித்தனர், அவர்கள் பாடசாலை அணி கிரிக்கெட் வீரர்களைப் போல விளையாடிய இலங்கை அணியினரை போராடச் செய்தனர்.

திறமை, ஆட்டத்தின் மீதான புரிதல், திட்டம் மற்றும் அதை செயல்படுத்துதல் ஆகிய அனைத்திலுமே இரு அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு இது மிகச்சவாலான நேரம். ஏனெனில் சொந்த மண்ணில் தங்களுக்கு சாதகமாக பெரிய ஓட்ட இலக்கை அடிக்குமளவிற்கான ஃப்ளாட் பிட்ச்சை தயார் செய்தும் கூட, சராசரி ஸ்கோரையே அடித்தது இலங்கை அணி.

இலங்கை வீரர்கள் சுழற் பந்து வீச்சுகளை ஆடிய விதம், சுழற் பந்துகளுக்கு ஆடவே தெரியாதுபோல இருந்தது. 

பொதுவாக இலங்கை வீரர்கள் சுழற்பந்துகளை திறம்பட எதிர்கொள்வார்கள். ஆனால் தற்போதைய இலங்கை வீரர்கள் அந்த நிலையை இன்னும் எட்டவில்லை என்று கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41