கொரோனாவைக் கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அரச ஊழியர்களை கௌரவிக்க தீர்மானம்

Published By: Digital Desk 4

19 Jul, 2021 | 08:53 PM
image

ட்ரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வருடாந்தம் நடத்தப்படும் 'இன்டகிரிட்டி ஐக்கொன்' விருதுவழங்கல் செயற்திட்டத்தின் ஊடாக இவ்வருடம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய நேர்மையான அரச ஊழியர்களை கௌரவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவலானது உலகநாடுகளின் சுகாதாரத்துறைசார் இயலுமையைப் பரீட்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலகெங்கிலும் பெருமளவான அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். இந்தத் தொற்றுநோய்க்கு எதிரான அவர்களது நேர்மையானதும் அர்ப்பணிப்பானதுமான செயற்பாட்டை அங்கீகரித்து, அவர்களை கௌரவப்படுத்தவேண்டிய கடப்பாடு நாட்டுமக்களாகிய எமக்கு உள்ளது.

எனவே ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வருடாந்தம் நடத்தப்படும் 'இன்டகிரிட்டி ஐக்கொன்' விருதுவழங்கல் செயற்திட்டத்தின் ஊடாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய நேர்மையான அரச ஊழியர்களை கௌரவிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதால், அவ்வாறான ஊழியர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

'கொவிட் - 19 தொற்றைத் தடுப்பதற்காக செயலாற்றும் சாதனையாளர்கள்' எனும் தொனிப்பொருளின்கீழ், தொற்றுநோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த தமது கடமைகளுக்கு அப்பால் அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பணியாற்றும் அரச ஊழியர்களை கௌரவிக்க இம்முறை 'இன்டர்கிரிட்டி ஐக்கன் 2021' முயற்சிக்கின்றது.

இலங்கையில் இன்டர்கிரிட்டி ஐக்கன் 2021 நேர்மைக்கு மகுடம் செயற்பாடானது 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 'நேர்மைக்கு கௌரவம்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது. உலகளாவிய ரீதியில் நேபாளம், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளில் இவ்வாண்டு இன்டர்கிரிட்டி ஐக்கன் 2021 பிரச்சாரம் நடைபெறுகிறது. இன்டர்கிரிட்டி ஐக்கன் பிரச்சாரமானது வெளியக மற்றும் உள்ளக அழுத்தங்களுக்கு அப்பால் ஊழலுக்கு எதிராக மற்றும் நேர்மையாக தமது பணிகளை நிறைவேற்றும் அரச ஊழியர்களை கௌரவித்து அங்கீகரிக்கும் செயற்பாடாகும்.

இன்டர்கிரிட்டி ஐக்கன் விருதானது பொதுமக்களின் பங்குபற்றலுடன் அதாவது யார் இவ்விருதுக்கு பொருத்தமானவர் என்பது பொதுமக்களின் பரிந்துரைகள் மூலம் தெரிவு செய்யும் ஓர் தனித்துவமான விருதுவழங்கல் செயற்திட்டமாகும். இன்டர்கிரிட்டி ஐக்கன் 2021 இற்கு அரசசேவையில் ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட சேவைக்காலத்தையும் மற்றும் ஓய்வுபெற இன்னும் ஐந்து வருடகால இடைவெளியும் கொண்ட கொவிட் - 19 தொற்றை தடுப்பதற்காக பணியாற்றும் அரச ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது அவர்களை பரிந்துரைக்கலாம். 'இன்டர்கிரிட்டி ஐக்கன் 2021' இற்கான பரிந்துரைகளை பொதுமக்கள் எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதிவரை சமர்ப்பிக்கலாம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19