மலையக சிறுமியின் மரணம் குறித்து மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவதானம் செலுத்த வேண்டும் - பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர்

Published By: Digital Desk 4

19 Jul, 2021 | 08:50 PM
image

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த 15 வயது சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  மரணமடைந்தமை மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது. மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு சிறுமிக்கான நீதியை பெற்றுகொடுக்க வேண்டுமென பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

 

சுபீட்சமான வாழ்வை தரும் தினமாக தைப் பொங்கல் அமையட்டும் | தினகரன்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

மலையக மக்களின் வறுமை நிலையை ஒருசிலர் தவறான முறையில் பயன்படுத்தி தரகர்களாக செயற்பட்டு கல்விகற்கவேண்டிய சிறுவர்களை வேலைக்கமர்த்தி வருமானம் பெறுகின்றனர். 

இவ்வாறு தங்களுடைய தரகு பணத்தை பெறும் தரகர்கள் அந்த சிறுவர்கள் பற்றியோ அவர்களின் பெற்றோர் பற்றியோ நினைத்துப்பார்ப்பதில்லை.   இவ்வாறான நிலை ஏனைய சிறுவர்களுக்கும் இடம்பெற்றிருக்கின்றது. 

இதுதொடர்பில், பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனையை நீதித்துறை வழங்கும்.  

அத்தோடு, மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு சிறுமிக்கான நீதியை பெற்றுகொடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11
news-image

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட...

2024-03-28 09:46:04