எதிரணியில் பரந்துபட்ட கூட்டணி அமைக்கும் முயற்சி

Published By: Digital Desk 2

19 Jul, 2021 | 03:53 PM
image

ராஜபக்ஷவினரின் அரசாங்கத்தின் மீது அதிருப்திகள் வலுத்துவருகின்ற நிலையில் எதிரணியை பலமாக்குவது தொடர்பில் முக்கிய தலைவர்கள் கொள்கை அளவில்இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ரணில்,கரு, சஜித் ஆகியோரை இணைப்பதென்றும் அந்த அணியுடன் ஏனைய சிறு, சிறுபான்மை அரசியல் கட்சிகளையும்இணைத்துக்கொள்வதென்றும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கின்றது. 

ஆனாலும், எதிரணியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவும்சஜித் பிரேமதாஸவும் இணைந்து செயற்படுவதில் சிலருக்கு கடுமையான விருப்பமின்மை காணப்படுவதாகதெரிவிக்கப்படுகிறது.  குறிப்பாக ஐக்கிய மக்கள்சக்தியில் உள்ள சரத் பொசேகா மற்றும்  ரஞ்சித்மத்தும பண்டார ஆகியோர்  ரணிலும் சஜித்தும் இணைந்துசெயற்படக் கூடாது என்ற விடயத்தில் உறுதியாக இருக்கின்றனர்.  

ஆனால் அவர்கள் இருவரைத் தவிர ஐக்கிய மக்கள் சக்தியில்  இடம்பெறுகின்ற சகலரும் ரணிலும் சஜித்தும் இணைந்துசெயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.  அதேபோன்று எதிர்க்கட்சியில் இடம்பெறுகின்ற சிறுபான்மைகட்சிகளும் ரணிலும், சஜித்தும் இணைந்து   செயற்படவேண்டுமென்பதை  வலியுறுத்தி வருகின்றனர்.  

‘கரு’வுக்கு கூட்டணியின் தலைமை

இதனிடையே, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிக்கூட்டணியை முன்னெடுத்துச் செல்வதற்கு கரு ஜெயசூரிய போன்ற ஒருவர் தலைமைத்துவத்தை ஏற்பதுமிகவும் பொருத்தமாகவும் சரியாகவும் இருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்ஒருவர் தெரிவித்தார். 

கரு ஜயசூரிய போன்றவர் நேரடி அரசியலில் ஈடுபடாவிடினும்கூடஅவர் ஒரு தலைமையை ஏற்று செயற்படுவது பொருத்தமாக இருக்கும். அவர் இந்தக் கூட்டு எதிரணிக்குதலைமைத்துவத்தை ஏற்று செயல்பட முடியும். அதன் ஊடாக  பல்வேறு தரப்புகளையும் ஒன்று இணைப்பதற்கான சாத்தியம்இருக்கின்றது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அந்த முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.

சஜித்தின் நகர்வுகள்

 எதிர்க் கட்சியில் அங்கம் வகிக்கும் பிரதான முக்கியஸ்தர்களைகடந்த திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள தாஜ் ஹோட்டலில்சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்சுமந்திரன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களான திகாம்பரம் வேலுகுமார்உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரஞ்சித் மத்தும பண்டாரமற்றும் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்போது  அரசாங்கத்துக்கு எதிராக எதிரணியினர் அனைவரும் கூட்டாகஇணைந்து பலமாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி சஜித் பிரேமதாச உரையாற்றி இருக்கிறார்.  ஆனால் அவர் உரையாற்றிய முடிந்ததும் அந்தக் கலந்துரையாடலில்கலந்துகொண்டிருந்த எவரும் பதில் சொல்லாது வெளியேறியுள்ளனர் என்று அறிய முடிகிறது.  

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-18#page-5

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48