இந்தியாவில் குறைவடையும் கொரோனா தொற்று

19 Jul, 2021 | 12:10 PM
image

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியாவில்  பாதிப்புகள் உச்சமடைந்தது. இதன் விளைவாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. தடுப்பூசி ஏற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதனால்  இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு ஓரளவு குறையத்தொடங்கியுள்ளது.

நேற்றை தினத்தைவிட இன்றைய தினம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு  சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 38 ஆயிரத்து 164 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அதனடிப்படையில்  நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 11 இலட்சத்து 44 ஆயிரத்து 229 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நேற்றைய தினத்தில் 499 பேர் உயிரிழந்துள்ளனர். அதனடிப்படையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,14,108 ஆக உயர்வடைந்துள்ளதுடன் கடந்த 24 மணிநேரத்தில் 38,660 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 03 இலட்சத்து எட்டாயிரத்து 456 ஆக உயர்வடைந்துள்ளது. இதன் பிரகாரம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோரது சதவிகிதம் 97.31  அமைந்துள்ளது.

இந்தியா முழுவதும் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான  4,21,665 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதேபோன்று  இந்தியா முழுவதும்  இதுவரை 40,64,81,493 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17