மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்

Published By: Raam

05 Sep, 2016 | 08:03 AM
image

மலேஷியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதல் காரணமாக தலையில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதலில் மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் மற்றொரு சிரேஷ்ட அதிகாரியும் காயமடைந்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு நேற்றுமாலை இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது.  

தாக்குதலில் காயமுற்ற மலேஷியாவிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் அவரது இரண்டாவது செயலாளர் ஆகியோர்  கோலாலம்பூர் வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டனர்.    

மஹிந்த ராஜபக்ஷவுடன் மலேஷியாவுக்கு  சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த  கூட்டு எதிரணியின் தலைவர்  தினேஷ் குணவர்தன நாடு திரும்ப இருந்தமையால் அவரை வழியனுப்ப கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு  வந்த போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் தாக்குதலுக்குள்ளானர் என்ற தகவலை வெ ளிவிவாகார அமைச்சு உறுதிப்படுத்துகிறது. நேற்றுமாலை சிலர் உள்ளிட்ட குழுவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கை அரசாங்கம் மிகவும் வன்மையான முறையில் கண்டிக்கின்றது. 

தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பில் மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகமானது உள்நாட்டு சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. 

தாக்குதல் நடத்தியோரை அடையாளம் காணவும், விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராஜதந்திர பிரிவுகளூடாக தேவையான நடவடிக்கைகளை வெ ளிவிவகார அமைச்சு எடுத்துள்ளது என்பதை வலியுறுத்துகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை  தாக்குதல் நடத்திய குழுவினர்  விமான நிலையத்தில்  குறித்த குழுவினர் உயர்ஸ்-தா¬னி¬கர்  அன்சாரிடம் தற்சமயம் மலேஷியாவில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ''மஹிந்த ராஜபக்ஷ எங்கே?'' என கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கவர் ''அது பற்றி பொலிசாரிடம் கேளுங்கள்'' என பதிலளித்துள்ளார். இதனையடுத்தே உயர்ஸ்¬தா-னி¬கர்  அன்சார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மலேசியா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.யின் குழுவில் அடங்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் அவருடன் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த பிரதிநிதிகளான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் மேல்மாகாண அமைச்சர் உபாலி கொடிகாரமற்றும் மகிந்தவின் பிரத்தியேக செயலாளர் உதித்த லொக்குபண்டார ஆகியோர் இன்று நாடு  திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50