மஹிந்தவின் கைகளில் இரத்த கரை படியவில்லை :  நாமலின் கருத்து அடிப்படையற்றது : டிலான்

Published By: MD.Lucias

16 Dec, 2015 | 07:45 PM
image

(எஸ்.ரவிசான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கைகளில்  இரத்த கரை படிந்துள்ளதாக தெரிவிப்பதை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவத்த அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் எதிர்கால அரசியலானது சிறந்த முறையில் அமைய வேண்டுமாயின் எமது கட்சியின் மத்திய செயற் குழுவினால் முன்னெடுக்கப்படும் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டு செயற்படுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மஹிந்த ராஜபக்ஷவினால் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் மேற்கொள்ளப்பட்ட சில இரகசிய ஒப்பந்தங்களே எமது நாட்டில் காணப்பட்ட கொடிய பயங்ரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்ததாகவும் சுட்டிகாட்டினார்.

கொழும்பில் அமைந்துள்ள  ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர்தொடர்ந்து உரையாற்றுகையில்.

இன்று மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் அவரால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளினால் அவரின் கைகளில் இரத்த கரை படிந்துள்ளதாக ஒரு சிலர் தெரிவிப்பதானது மிகவும் அடிபடை தன்மையற்றது. எனது தனிப்பட்ட கருத்தின் படி அவரின் கைகளில் இரத்த கரை படிந்துள்ளதாக தெரிவிப்பதை நான் ஒரு போதும் ஏற்றுகொள்ள மாட்டேன்.

எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் பல்வேறு அரசியல் பிரதிநிதிகள் பல்வேறு வகையிலான ஒப்பந்தங்களை கைச்சதிட்டுள்ளனர். அவ்வகையான ஒப்பந்தங்கள் நாட்டுக்கு நன்மையளித்துள்ளதோடு சில தீமைகளையும் விளைவித்துள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராமன்றத்தில் உரையாற்றும் போது, எமது தந்தையின் ஆட்சியில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு முக்கியதுவம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்றிட்டங்கள் மூலம் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பானது கேள்வி குறியாகியுள்ளது என தெரிவித்திருந்தார். இக் கருத்தானது அடிப்படை தன்மையற்றதாகும். தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய மத்திய குழுவே அதனை தீர்மானிக்கின்றது.

எனவே இவ்வாறான கருத்துக்களை அவர் தெரிவிப்பதானது நியாயமற்றது. எனவே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு நாம் ஒன்றை கூற விரும்பிக்கின்றோம். 

அதாவது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் தமது அரசியல் தீர்மானங்களை அவர் முன்னெடுக்கும் பட்சத்தில் அவருக்கு நல்லதொறு அரசியல் எதிர்காலம் உள்ளது என்பதை அவர் புறிந்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37