சமரசத்தை தலிபான்கள் உருவாக்க வேண்டும் :  ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா

Published By: Digital Desk 2

18 Jul, 2021 | 11:48 AM
image

அமைதியான மற்றும் வளமான ஆப்கானிஸ்தானுக்கு தோஹா , இஸ்தான்புல் செயல்முறைகள் மற்றும் மாஸ்கோ வடிவத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமரசத்தை உருவாக்க வேண்டும் என்று  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பான துஷன்பேவில் இடம்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வெளியுறவு அமைச்சர்களின் குழு கூட்டத்தில் இதனை வலியுறுத்திய நிலையில் இதன் போது  பாகிஸ்தான் மற்றும் சீனா வெளிவுறவு அமைச்சர்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.

மேலும் பாகிஸ்தானுக்கான அறிவிப்பின் போது  பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிர்ப்பதே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) முக்கிய நோக்கமாகும். எனவே பயங்கரவாத நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்றும் நினைவு கூர்ந்தார்.

பிராந்தியத்தின் மதச்சார்பற்ற மற்றும் பன்மைத்துவ கலாச்சாரத்தை சீர்குலைக்கும் பிளவு குழுக்கள் மத்திய ஆசியாவில் பரவக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் அண்டை நாடுகளுக்கு (ஈரான் மற்றும் மத்திய ஆசியா) பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றால் அச்சுறுத்தல் ஏற்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு அவர்கேட்டுக்கொண்டுள்ளார்.

எஸ்சிஓ மற்றும் அதன் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (ராட்ஸ்) உடனான பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் இந்தியா மிகுந்த அக்கறை காட்டியுள்ளது. இது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை கையாள்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தெஹ்ரான் மற்றும் மாஸ்கோவிற்கான தனது பயணங்களைத் தொடர்ந்து, மத்திய ஆசியாவிற்கான பயணத்தில்  வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஈடுப்பட்டுள்ளார். தலிபான் எழுச்சிக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52