இருபதுக்கு - 20 உலகக் கிண்ண தொடர் ! வெளியானது அணிகள் அடங்கிய பட்டியல் ! ஆப்கானிஸ்தனை விட மோசமான நிலையில் இலங்கை

Published By: Digital Desk 2

17 Jul, 2021 | 10:57 AM
image

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இருபதுக்கு-20 உலகக்கிண்ண தொடரில், எந்தெந்த அணிகள் எந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளன என்பதை தெளிவுப்படுத்தும் குழு விபரங்களை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இந்தச் சுற்றுக்கு சுப்பர்-12 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள அணிகள் அடங்கிய பட்டியலில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை விட மோசமான நிலையில் உள்ளது.

Men's T20WC 2021– Groups

இதேவேளை, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பட்டியலின் ஒரே குழுவில் இடம்பிடித்துள்ளன. ஐ.சி.சி. இருபதுக்கு -20 உலகக்கிண்ண 2021 தொடரின் போட்டிகள் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ளன.

ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான அணிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சூப்பர் 12 பிரிவில் குழு 1 மற்றும் குழுப் 2 என இரண்டாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் குழு 1 இல் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகளும், குழு 2 இல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் இடம்பெறுகின்றன.

இவை தவிர, குழு A மற்றும் குழு B என இரண்டாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. குழு A   யில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.

குழு B   யில் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.குழு A   மற்றும் குழு B   அணிகளில் வெற்றி பெறும் அணிகள் முறையே குழு 1 மற்றும் குழு 2 ஆகியவற்றில் இடம் பெறும்.இதேபோன்று, குழு A யில் 2 ஆவதாக இடம்பெறும் அணி குழு 2 இலும் , குழு B யில் 2 ஆவதாக இடம்பெறும் அணி குழு 1 லும் இடம்பெறும்.

இந்த தொடர், இந்தியாவில் நடைபெறாவிட்டாலும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் சார்பாகவே நடைபெறுகின்றது.

டுபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு இடங்களில் இருபதுக்கு-20 உலகக்கிண்ண தொடரின் போட்டிகள் நடைபெறுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31