அஜித் கூறிய அறிவுரையை இன்றும் கடைபிடிப்பதாக நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்த 'ஆடுகளம்' மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்சி. இந்தி, தெலுங்கு பட உலகில் தற்போது முக்கிய இடம் பிடித்துள்ளார்.

அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யா ஜோடியாக இவர் நடித்தார். இந்த படப்பிடிப்பின் போது அஜித் கூறிய அறிவுரையை இப்போதும் கடை பிடிப்பதாக டாப்சி சொல்கிறார். 

இதுபற்றி டாப்சி கூறுகையில் “நம்மைப்பற்றி நல்லது வருவதை விட்டுவிடு. அதை நமக்குப்பிடித்த யாரோ சொல்லி இருப்பார்கள். நமக்கு எதிரான விமர்சனங்கள் வந்தால் அதை மனதில் கொள்ள வேண்டும். அதை வைத்து தான், நமது தவறுகளை நாம் திருத்தி முன்னேற வேண்டும் என்று அஜித் என்னிடம் கூறி இருக்கிறார். அவர் சொன்ன இந்த அறிவுரையைத் தான் நான் இன்றும் பின்பற்றுக்கிறேன். அது நூறுக்கு 100 உண்மை” என்றார்.

டாப்சி தற்போது 'பிங்க்', 'கழி', 'தட்கா' ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் 'பிங்க்' படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.