வற் வரி அதிகரிப்பு திருத்தச் சட்டமூலம் : மாத இறுதியில் அமைச்சரவையில் சமர்ப்பு

Published By: Robert

04 Sep, 2016 | 03:11 PM
image

வற் வரி வீதத்தை 11  வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான வற்வரி அதிகரிப்பு திருத்தச் சட்டமூலம் இம்மாதம் இறுதிப் பகுதியில் பாராளுமன்றத்தில் நிதியமைச்சினால் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது தொடர்பான யோசனை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்துவிட்டு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

அந்த வகையில் அமைச்சரவையானது வற்வரி அதிகரிப்பு  சட்டமூலத்திற்கு அங்கீகாரத்தை வழங்கியதும் அதனை வர்த்தமானியில் வெளியிடவும் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரியவருகிறது. 

இது இவ்வாறு இருக்க புதிய வற்வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் தெரிகிறது. 

அதாவது ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வற்வரி திருத்தச் சட்டமூலத்தில் மாதம் 12 மில்லியன் மற்றும் ஒரு நாளைக்கு 33 ஆயிரம் ஷரூபாவுக்கு மேல் வருமானம் பெறும் வர்த்தகர்கள் வற்வரிக்கு உட்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் தற்போதைய திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாதம் ஒன்றுக்கு 50 மில்லியன் ஷரூபா பெறும் வர்த்தகர்கள் வற்வரிக்கு உட்படுவதாக வரையறை செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பான திருத்தத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்ததாகவும் இதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது. அந்தவகையில் இம்மாத இறுதியில் புதிய வற்வரி அதிகரிப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த மே மாதம் 2 ஆம் திகதி முதல் வற்வரி அதிகரிப்புச் சட்டமூலம் அமுலுக்கு வந்தது. அதாவது 11 வீதமாக இருந்த வற்வரியானது 15 வீதமாக அதிகரிக்கப்பட்டிருந்தது. எனினும் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கு வற்வரி சட்டமூலம் உட்படுத்தப்படமாட்டாது  அரசாங்கத்தினால்  என பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. 

எவ்வாறெனினும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வற்வரி அதிகரிப்பு சட்டமூலம் சட்டவிரோதமானது எனக்கூறி வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதன்படி வழக்கினை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் வற்வரி அதிகரிப்பு சட்டமூலமானது அரசியலமைப்புக்கு முரணானது எனக்கூறியதுடன் வற்வரி அதிகரிப்புக்கு இடைக்கால தடையையும் விதித்திருந்தது. 

அந்தவகையிலேயே தற்போது உரிய விதிமுறைகளைப் பின்பற்றி வற்வரி அதிகரிப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53