கொக்காவில் பிரதேசத்தில் சட்ட விரோத கிரவல் அகழ்வு; 4 கனரக வாகனங்களுடன் ஐவர் கைது

16 Jul, 2021 | 03:50 PM
image

கொக்காவில் பிரதேசத்தில் சட்ட விரோத கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி முற்றுகையிடப்பட்டு 4 கனரக வாகனங்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வனப்பகுதியிலேயே குறித்த முறையற்ற கிரவல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் மண் அகழ்வாராய்ச்சி தள சட்ட பிரிவினை அமுலாக்கும் அதிகாரிகள் மற்றும் இராணுவப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.

இதன்போது கிரவல் அகழ்விற்கு அனுமதிக்கப்பட்டமைக்கு மாறாக அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மீது நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு மேலதிகமாக அகழ்வு மேற்கொள்ளப்பட்டமை மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மாறாக 20 அடிக்க மேல் அகழ்வு மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த அகழ்வு பணிக்கு பயன்படுத்தப்பட்ட 4 கனரக வாகனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த கிரவல் அனுமதி பெற்றுள்ள நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஐயங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிசார் ஊடாக நீதிமன்றில் வழங்கு தொடரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பிரதேசத்தில் 2010ம் ஆண்டுக்கு பின்னர் பாரிய கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில் அவ்விடயம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகளும் வெளிக்கொண்டு வரப்பட்டன. ஆனாலும், குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்ததுடன், அங்கு சுற்றாடலை பாதிக்கும் வகையில் அகழ்வுப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் கொழும்பிலிருந்து வருகை தந்த  புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் மண் அகழ்வாராய்ச்சி தள சட்ட பிரிவினை அமுலாக்கும் அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி இராணுவப் புலனாய்வுப்பிரிவு உத்தியோகத்தர்களும் குறித்த பகுதியை முற்றுகையிட்டு சோதனையிட்டு குறித்த சட்டவிரோத செயற்பாட்டை தடுத்து நிறுத்தியதுடன், சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையானது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை இதுவரை கண்டுகொள்ளாத பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், வனவள பாதுகாப்பு பிரிவு, வனஜீவராசிகள் திணைக்களம், கனியவள திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09