கொரோனா தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை

Published By: Digital Desk 4

15 Jul, 2021 | 09:54 PM
image

ஊரடங்கு கட்டுப்பாடுகள் பல நாடுகளில் தளர்த்தப்பட்டிருப்பதால் மக்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலை குறித்த அச்சம் உலக நாடுகளில் நிலவி வரும் நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இதுதொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் பேசுகையில், 

' மக்களின் நடமாட்டம் பொதுவெளியில் அதிகரித்திருப்பதாலும், முறையான பொது சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடிக்காததாலும் டெல்டா வகையான வைரஸ் பரவி வருகிறது. துரதிருஷ்டவசமாக நாம் மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம். வைரஸ் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

இதனால் பலவகையான கொரோனா பரவுகிறது. டெல்டா வகையான கொரோனா  நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது உள்ளது. இப்போது இல்லை என்றாலும், அதிகம் பரவக்கூடிய கொரோனாவாக அது மாறும் என எதிர்பார்க்கிறோம்.  அண்மைக்காலமாக ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கக் கண்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கொரோனா இறப்பு எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது.' என்றார்.

இதனிடையே கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கடந்த பத்து வாரங்களாக இறப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04