சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்

Published By: Digital Desk 4

15 Jul, 2021 | 09:49 PM
image

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிறைந்துறைச்சேனையில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை நடவடிக்கை இடம்பெறுவதனை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடுத்து நிறுத்துமாறு கோரி  கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை ஒன்று கூடியவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளும் முகமாக வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோசங்களை எழப்பியவாறு வீதி வழியாக சென்று வாழைச்சேனை நீதவான் நீதி மன்றத்திற்கு முன்னால் உள்ள பிரதான வாழைச்சேனை கொழும்பு வீதியில் நின்று கவனயீர்ப்பு கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பொலிசாருக்கு எதிராகவும் கோஸங்களை எழுப்பினார்கள்.'போதையை ஒழிப்போம் சிறுவர்களை காப்போம்' என்ற வாசகத்தை கையில் ஏந்தி கோஸம் எழுப்பினார்கள். 

இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர். 

இதன் பின்பு பொலிசார் அவர்களை கலைந்து செல்லுமாறு பணித்ததனையடுத்து கலைந்து சென்றதுடன் மீண்டும் அவர்கள் வசிக்கும் பன்சாலை வீதி பிறைந்துறைச்சேனையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.

மேற்படி கிராமத்தில் சுமார் 1540 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இங்கு சிலர் போதைப்பொருள் விற்பனையில் பகிரங்கமாக ஈடுபட்டு வருவதாகவும் பொலிசார் இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென என தெரிவிக்கின்றனர். 

இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்குவதுடன் கொரோனா தொற்று காலத்திலும் தங்கள் கிராமத்திற்குள் வெளியூர் வாசிகள் வந்து போதைப் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதனால் கொரோனா தொற்று ஏற்படும் அச்ச நிலமையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38