6300 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த இரு பெண்கள்

Published By: Digital Desk 3

16 Jul, 2021 | 12:03 PM
image

ரஷ்யாவில் இரு பெண்கள் பள்ளத்தாக்கின் உச்சியில் இருந்து கீழே விழும் காணொளி தற்போது இணையத்தில் உலாவருகிறது. 

6,300 அடி உயரம் கொண்ட சுலக் பள்ளத்தாக்கு ரஷ்ய கூட்டமைப்பின் தெற்குப் பகுதி தாகெஸ்தான் குடியரசில் உள்ளது.

இந்த பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தான ஊஞ்சல் சவாரி உள்ளது.

சம்பவம் தினத்தன்று, சுற்றுலா வந்த இரு பெண்கள்  ஊஞ்சல் சவாரி செய்ய விரும்பினார்கள். 

இந்நிலையில், அவர்கள் ஊஞ்சலில் அமர பணியாளர் ஒருவர் ஊஞ்சலை தள்ளிவிட ஆரம்பித்தார். சிறிது சிறிதாக வேகப்படுத்தினார்.

ஆரம்பத்தில் அவர்கள் மகிழ்ச்சியாக ஊஞ்சலில் சவாரி செய்த  நேரத்தில் எதிர்பாராத விதமாக ஊஞ்சல் அறுந்து கீழே விழுந்தார்கள்.

இச்சம்பவத்தில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார்கள்.

தாகெஸ்தானில் உள்ள சுற்றுலா அமைச்சகம், ஊஞ்சல்  'பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்யவில்லை, இதனால் பெண்கள் கீழே வீழ்ந்தனர்' என தெரிவித்துள்ளது. 

அறிக்கைகளின்படி, சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்கள் 'உயிருக்கு மற்றும் ஆரோக்கியத்திற்கு எதுவும் அச்சுறுத்தலாக இருப்பதை உறுதி செய்வதற்காக  பொருத்தமான சோதனைகளை நடத்தி வருகின்றன'.

இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றுலா துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right