ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து லன்சீட்டுக்கு தடை

Published By: Digital Desk 3

14 Jul, 2021 | 04:38 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

உணவுவகைகளை சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மக்காத பொலித்தீன் (லன்சீட்) உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து தடைசெய்யப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அத்துடன் தற்போது உற்பத்தி செய்திருக்கும் தொகையை மாத்திரம்  விற்பனை செய்வதற்கு ஒருமாத நிவாரண காலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உணவுவகைகளை சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மக்காத பொலித்தீன் (லன்சீட்) உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

என்றாலும் தற்போது உற்பத்தி செய்திருக்கும் தொகையை விற்பனை செய்வதற்காக ஒருமாத நிவாரண காலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னர் உற்பத்தி, விற்பனை மற்றும் பாவனை செய்ய முடியுமாக இருப்பது மக்கும் லன்சீட் மாத்திரமாகும்.

அதேபோன்று தடைசெய்யப்படும் இவ்வாறான லன்சீட் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றதா என தேடிப்பார்ப்பதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் நுகர்வோர் சேவை அதிகாரசபையினால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும். தடை உத்தரவை மீறி யாராவது அதனை உற்பத்திசெய்தல் மற்றும் விநியோகித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் நாட்டில் நாளாந்தம் லன்சீட் பாவனை 12 மில்லியனில் இருந்து 15 மில்லியன் வரை அதிகரித்திருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றதுடன் அதில் 99 வீதமானவை மீள் சுழற்சி செய்யப்படாது சுற்றுப்புற சூழலுக்கு கைவிடப்படுகின்றன.

அத்துடன் மக்கும் லன்சீட் தற்போது 10 தொழிற்சாலைகள் ஊடாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. அந்த தொழிற்சாலைகள் மக்காத லன்சீட் உற்பத்திசெய்தால், அவர்களது அனுமதி பத்திரத்தை தடைசெய்ய நடவடிக்கை எடுப்போம். 

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கீழ் பதிவுசெய்திருக்கும் நிறுவனங்களுக்கு மாத்திரமே மக்காத லன்சீட் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

அதுவல்லாமல், மேலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆன 8 வகையான உற்பத்திகளை தடைசெய்யும் பட்டியல் அடங்கிய அமைச்சரவை பத்திரத்துக்கு கைச்சாத்திட்டுள்ளேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44