கல்விக்கான உரிமையைப் படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் முயற்சி - மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை

Published By: Digital Desk 3

14 Jul, 2021 | 05:00 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் அதற்கு வேண்டிய சட்டங்களை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றிக்கொள்ளும் போக்கைக் காணமுடிகின்றது. 

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம், கொழும்புத்துறைமுகநகரப் பொருளாதார ஆணைக்குழுச்சட்டம் ஆகியவற்றின் வரிசையில் தற்போது ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தையும் நிறைவேற்றி இந்நாட்டுமக்களின் கல்வி உரிமையைப் படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் முயன்றுகொண்டிருக்கின்றது என்று மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவையின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

அங்கு அவர்கள் மேலும் கூறியதாவது:

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தினால் நாட்டின் இலவசக்கல்விக் கட்டமைப்பிற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக நாட்டிலுள்ள பொதுவான பல்கலைக்கழகக் கட்டமைப்புக்களுக்கும் பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டவரையறைகளுக்கும் முரணான வகையில் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு இந்தச் சட்டமூலம் வாய்ப்பளிக்கின்றது. 

அத்தோடு இந்தச் சட்டமூலத்தின் ஊடாக மேற்படி பல்கலைக்கழகம் உயர்கல்வியமைச்சின் கீழிருந்து பாதுகாப்பு அமைச்சின்கீழ் கொண்டுவரப்படும்.

உரிய சட்டவரையறைகளின்படி நிறுவப்பட்ட கட்டமைப்புக்களின் ஊடாக இராணுவ மற்றும் பாதுகாப்புத்துறைசார் பயிற்சி வழங்கப்படுவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை. அத்தகைய பயிற்சி வழங்கல் கட்டமைப்புக்களின் மூலம் இராணுவ மற்றும் போர்ப்பயிற்சி மாத்திரமன்றி மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் பாங்கு, பல்வேறு சமூகப்பிரிவுகளுடன் ஒன்றிணைந்து பணியாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

இருப்பினும் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தின் ஊடாக நிறுவுவதற்கு எதிர்பார்க்கும் கட்டமைப்பானது சாதாரண பல்கலைக்கழகங்களைப் போன்றதல்ல.

மாறாக அது இராணுவ மற்றும் பாதுகாப்புத்துறைசார் பயிற்சிகளை வழங்குவதை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக புதிய சட்டமூலத்தின் ஊடாக மேற்படி பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்படுபவர்கள் புத்திஜீவிகளும் கல்விமான்களும் அல்ல. 

மாறாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பல்கலைக்கழத்தின் பீடாதிபதி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெயர்குறிப்பிடப்படும் ஒருவர், நிதியமைச்சினால் பெயர்குறிப்பிடப்படும் ஒருவர் உள்ளிட்ட தரப்பினரே இப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகசபையில் அங்கம்வகிக்கப் போகின்றார்கள். ஆகவே பாதுகாப்பு அமைச்சின் கட்டளைகளே இந்த நிர்வாகசபையின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் அதற்கு வேண்டிய சட்டங்களை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றிக்கொள்ளும் போக்கைக் காணமுடிகின்றது. அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம், கொழும்புத்துறைமுகநகரப் பொருளாதார ஆணைக்குழுச்சட்டம் ஆகியவற்றின் வரிசையில் தற்போது ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தையும் நிறைவேற்றி இந்நாட்டுமக்களின் கல்வி உரிமையைப் படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் முயன்றுகொண்டிருக்கின்றது. 

ஆகவே இந்தச் சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, நாட்டினதும் பொதுமக்களினதும் ஜனநாயகத்தன்மைக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31