ஊடகங்களை அடக்குவது எதிர்க்கட்சியினரே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

Published By: Digital Desk 3

14 Jul, 2021 | 02:40 PM
image

ஊடகங்களை அடக்குவது நாமல்ல எதிர்க்கட்சியினரே  என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மைக்காலமாக ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்தால் தொடர்சியாக ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்  தொடர்பாக இன்று புதன்கிழமை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தற்போது இருக்கின்ற கொரோனா சூழ்நிலை காரணமாகத்தான் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுகிறது,  அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ ஊடகங்களையோ ஊடகவியலாளர்களையோ  ஒருபோதும் அச்சுறுத்துவதில்லை.

எதிர் கட்சியினர்தான் இவ்வாறு கூறுகின்றனர், அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்துகின்றது, வர வேற்கின்றது எதிர் கட்சியினரே இவ்வாறு போலியாக அரசங்கத்தின் மீது பலி கூறுவதை நான் பார்க்கின்றேன்.

நாட்டினுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்பும்  வேலைத் திட்டங்களை நாங்கள் முன்னெடுக்க வேண்டும், வெளிநாடுகளில் கடன் வாங்கவேண்டும் அல்லது மக்களிடம் வரி எடுக்க வேண்டும் மக்களிடம் வரி எடுப்பது  என்பது எமது நாட்டைப் பொறுத்தவரையில் மக்களுக்கு பாரிய சுமையாக மாறிவிடும்.

கடன் வாங்குவது என்பது சிக்கலான ஒரு விடயம், பாரிய முதலீடுகளை கொண்டு வருவது என்பது மிக முக்கியமானது நாட்டினுடைய இறைமைக்கு பௌதிக  வளத்திற்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் தான் அரசாங்கம் சில திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

முதலீட்டை பொருத்த வரையில் யாரும் நாட்டுக்குச் செய்ய முன்வரலாம்  இந்தியாவாக இருக்கலாம் சீனா மற்றும் அமெரிக்காவாக இருக்கலாம் எவராக இருந்தாலும் முதலீடுகளை  கொண்டுவரலாம் என்பதைத்தான் பிரசன்ன ரணதுங்க அவர்கள் அன்றும் தெரிவித்திருந்தார்.

இந்த  முதலீடுகளின் மூலமாக எம்மவர்களுக்கு  வேலைவாய்ப்பு கிடைக்கும் ஆக இருந்தால் அதை நாங்கள் வரவேற்போம். அமைச்சர் பசில் ராஜபக்ஷ தூர நோக்குள்ள ஒருவர் பல அபிவிருத்திகளை செய்துள்ளார். அவருடைய வருகை மிக முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04