67 இலட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க நாணயத் தாள்களுடன் மாலைத்தீவு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று காலை 6.30 மணியளவில்  சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலைத்தீவிற்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 53 வயதுடைய மாலைத்தீவு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் பயணப்பையில் 47 ஆயிரம் அமெரிக்க டொலர்களை மறைத்து வைத்து கடத்த முயன்றுள்ளார்.