பாகிஸ்தானின் வெற்றியை  தட்டிப் பறித்தது இங்கிலாந்து

Published By: Digital Desk 2

14 Jul, 2021 | 12:47 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் பாபர் அசாம் 158 ஓட்டங்களை குவித்து அசத்தியபோதிலும், இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் வின்ஸின் சதம் மற்றும் கடை  நிலை துடுப்பாட்ட வீரர்களின்  பொறுப்பான துடுப்பாட்டத்தின் காரணமாக பாகிஸ்தானின் வெற்றியை  தட்டிப் பறித்தது இங்கிலாந்து அணி.

பேர்மிங்ஹாமில் நடைபெற்ற 3 ஆவது மற்றும் கடைசிப் போட்டியில் பாகிஸ்தான்   அணி 331 ஓட்டங்களை குவித்திருந்தபோதிலும், பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 12 பந்துகள் மீதப்படுத்தி 332 என்ற வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது இங்கிலாந்து அணி.

கொரோனா  தொற்று பீடித்ததன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முதன்மை வீரர்கள் பலர் பாகிஸ்தான் அணிக்கெதிரான இப்போட்டித் தொடரில் பங்கேற்க முடியாமற் போனது. இதனால், இங்கிலாந்து அணியின் இளம் வீரர்கள் பலருக்கு இப்போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.  இந்த அணியில் பென்ஸ் ஸ்டோக்ஸ், டாவிட் மாலன் ஆகியோரைத் தவிர ஏனையோரர் இங்கிலாந்து டெஸ்ட் அணி வீரர்கள், இளம் வீரர்கள் ஆகியோரே இப்போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தனர். அவர்களில் ‍அநேகமானோர் அறிமுகத் தொடரில் பங்கேற்றவர்களாவர். 

இவ்வாறான நிலையில், பாகிஸ்தானுக்கு  எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியமை விசேட அம்சமாகும். குறிப்பாக லூயிஸ் கிரகரியின் துடுப்பாட்டம் , பந்துவீச்சு , களத்தடுப்பு ஆகியன சிறப்பாக காணப்பட்டது. இவரின் சகலதுறை ஆட்டம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மற்றுமொரு பென் ஸ்டோக்ஸை உருவாக்கிக் கொண்டுள்ளது. அவரைத் தவிரவும், கிரேக் ஓவர்ட்ன், ஷகிப் மஹ்மூட், பிறயிட் கார்ஸ் ஆகிய சிறந்த பந்துவீச்சாளர்களை இனங்கண்டுள்ளது.

உலகின் ஏனைய கிரிக்கெட் அணிகளிலும், குறிப்பாக இலங்கை கிரிக்கெட் அணியிலும் குறிப்பிட்ட வீரர்களில் மாத்திரம் கிரிக்கெட் விளையாட்டு தங்கியிருக்காது, ஏனையோருக்கும் குறிப்பாக இளம் வீரர்களுக்கும் தக்க வாய்ப்பளித்தால் நன்மை பயக்கும்.  இதற்கு சிறந்த உதாரணமாக இத்தொடர் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58