கரு­வு­றா­மைக்­கான கார­ணங்கள்

Published By: Robert

04 Sep, 2016 | 10:02 AM
image

குழந்­தைப்­பேறு என்­பது எல்லாத் தம்­ப­தி­களும் வேண்டும் விரும்பும் பொது­வான ஒரு விஷ­யம்தான். பலர் இந்த விஷ­ய­மாக ஆசீர்­வ­திக்­கப்­பட்­டாலும் சில­ருக்கு இந்த சந்­தோஷம் எளி­தாகக் கிடைத்­து­வி­டு­வ­தில்லை.. எல்லா விரல்­களும் ஒன்­று­போல இருப்­ப­தில்லை இல்­லையா? அது­போ­லத்தான் எல்லா தம்­ப­தி­க­ளுக்கும் இந்த விஷயம் ஒரே சமயம், தாங்கள் எதிர்­பார்ப்­பது போல நடந்­து­விடும் என்று சொல்­லி­விட முடி­யாது.

இன்றும் சரி, அன்றும் சரி… திரு­ம­ண­மான தம்­ப­தி­க­ளுக்கு அவர்­க­ளு­டைய குடும்­பங்கள் கொடுக்கும் அதி­கப்­ப­டி­யான அவ­காசம் மூன்று மாதங்­கள்தான். அதன் பிறகு ‘இன்னும் உண்­டா­க­லையா..?’ என்­கிற கேள்­வி­களால் அந்தத் தம்­ப­தியை அரித்­தெ­டுக்கத் தொடங்கி விடு­கி­றார்கள். அவர்­க­ளு­டைய உற­வி­னர்­களும் நண்­பர்கள் வட்­டமும்.

குழந்­தை­யின்­மைக்கு பல கார­ணங்கள் சொல்­லப்­பட்­டாலும் இவை அனைத்­துக்கும் இன்­றைய நவீன மருத்­து­வத்தில் சிகிச்சை உண்டு

பெண்ணின் இனப்­பெ­ருக்க மண்­ட­லத்தில் இரு முட்டை பைகள், இரு கருக்­கு­ழாய்கள், கருப்பை, கருப்பை வாய் மற்றும் யோனி உள்­ளது. இத­னுடன் ஆணின் நல்ல விந்­த­ணுக்­களும் மர­ப­ணுக்­களும் சேர­வேண்டும். இந்த உறுப்­புகள் நல்ல அமைப்­பு­டனும் மற்றும் செயற்­பாட்­டு­டனும் இருந்தால் குழந்­தை­பேறு ஒரு பிரச்­சி­னை­யா­காது.

கரு­முட்டை பையும் அதன் முக்­கி­யத்­துவம் பற்­றியும் பார்ப்போம்.

ஒவ்­வொரு மாதமும் இனப்­பெ­ருக்க வய­தி­லி­ருக்கும் பெண்­களின் முட்டை பையி­லி­ருந்து முட்டை 14 ஆம் நாளி­லி­ருந்து 16ஆம் நாளுக்குள் வெளி­வ­ரு­கி­றது. இதி­லி­ருந்து 14நாட்கள் கழித்து மாத­விடாய் வரு­கி­றது. இதில் ஏதா­வது ஒரு மாற்றம் ஏற்­பட்­டாலோ முட்டை வெளி­யேறா­விட்­டாலோ கரு­வு­றாமை பிரச்­சினை ஏற்­ப­டு­கி­றது கரு­முட்டை தான் கரு­த­ரிப்­ப­தற்கு முதல்­சுழி. வயது அதி­க­மாக அதி­க­மாக முட்­டையின் எண்­ணிக்கை மற்றும் தரம் குறை­கி­றது.

முட்­டைப்­பையின் பிரச்­சி­னைகள் என்ன?

நீர்க்­கட்­டிகள், எண்­டோ­மெட்­ரி­யோஸிஸ், முட்­டைப்பை கட்­டிகள், கரு­முட்டைப் பை செய­லி­ழத்தல் மற்றும் கட்­டிகள் ஆகும்

நீர்க்­கட்­டிகள்:

மிகவும் பர­வ­லாக காணப்­படும் வியாதி. இது முக்­கி­ய­மாக ஹோர்­மோன்­களின் பிரச்­சி­னைகள், சரி­வ­ராத உணவு, அதி­கப்­ப­டி­யான உடல் பருமன் போன்­ற­வற்றால் கட்­டு­க­டங்­காமல் போகி­றது. இது ஒரு மரபுக் குறை­பாடு. இதை சரி­யான உணவு மற்றும் பழக்­க­வ­ழக்­கங்­களால் கட்­டுப்­ப­டுத்த முடி­யு­மே­யொ­ழிய முழு­வ­தாக மீட்­க­மு­டி­யாது.எங்கள் GBR கிளி­னிக்கில் நாங்கள் ஒரு சரி­யான உண­வு­முறை திட்­டத்தை உரு­வாக்­கி­யுள்ளோம். இது எங்­களின் அனு­பவம் மற்றும் ஆராய்ச்­சியின் மூலம் உரு­வாக்­கப்­பட்­டது. எங்­க­ளிடம் IVFசிகிச்­சைக்­காக வந்த பல பேர் இந்த உணவு திட்டம் மற்றும் கவுன்­ஸிலின் மூல­மாக சாதா­ர­ண­மா­கவே கருத்­த­ரித்­துள்­ளனர் என்­பது பெரு­மைக்­கு­ரிய விஷயம்

எண்­டோ­மெட்­ரி­யோஸிஸ்

இது மாத­விடாய் காலத்­திலும் உட­லு­றவு கொள்­ளும்­போதும் மிக வலி­யையும் மன­வு­ளைச்­ச­லையும் கொடுக்கும். இதில் முட்­டை­களின் எண்­ணிக்­கையும் தரமும் குறைந்தே காணப்­ப­டு­கி­றது. இது லேசாக இருக்­கும்­போது மருந்­துகள் மற்றும் IUI மூலம் எளி­தாக கரு­த­ரிக்­கலாம் .இது கடு­மை­யாகி பர­வி­ய­பி­றகு சத்­தி­ர­சி­கிச்சை மூல­மாக கட்­டி­களை விலக்கி IVFமூல­மாக கருத்­த­ரிக்­கலாம்.

கரு­முட்டை பை கட்­டிகள்:

இவை சாதா­ர­ண­மாக ஹோர்மோன் தொந்­த­ர­வாலும் கரு­முட்டை வெடிக்­கா­விட்­டாலும் வரும். இவற்றை எளி­தாக மருந்­து­களால் போக்­க­மு­டியும். சில டெர்மால்ட் போன்ற கட்­டி­களை லெப்­ராஸ்­கோப்பி மூல­மாக நீக்­கலாம்.

முட்டை பை செய­லி­ழத்தல்

சில­பே­ருக்கு 40வய­திற்கு முன்னே மாத­விடாய் நின்­று­போகும். இதற்கு பல கார­ணங்கள் உள்­ளன. இதில் முட்­டையும் அதன் தரமும் குறை­பா­டுடன் காணப்­படும். உட­ன­டி­யாக முட்­டை­தானம் மூல­மாக சிகிச்சை பெற்றுப் பய­ன­டை­யலாம்.

கேன்சர் கட்­டிகள்:

சிறிய அள­வி­லி­ருந்தால் கட்­டி­களை நீக்­கிய பிறகு சிகிச்சை பெறலாம். முற்­றிய நிலையில் இருப்­ப­வர்­க­ளுக்கு உட­ன­டி­யாக IVFசெய்து கரு­வையோ அல்­லது முட்­டை­யையோ எடுத்து ஐஸில் வைக்­கப்­பட்டு பிறகு உப­யோ­கப்­ப­டுத்­தப்­படும்

முட்­டையின் தரமும் அதன் எண்­ணிக்­கையும் தான் நாம் வழங்கும் சிகிச்­சையின் வெற்­றிக்கு எடுத்­துக்­காட்டு. இவை இரண்டும் நன்­றாக இருந்­தாலே 75 வீதம் வெற்­றியை கொடுக்க முடியும்.இவை இரண்­டையும் தீர்­மா­னிப்­பது என்ன வென்றால் FSH, AMH என்­கின்ற ஹோர்­மோன்கள். முட்­டையின் தரமும் அதன் எண்­ணிக்­கையும் சரி­யாக அமைய வயது மற்றும் மிக­முக்­கி­ய­மாக நாம் கொடுக்கும் இன்ஜெக் ஷன்ஸ் மருந்­துகள் தான் முதற்கண் காரணம். இதிலும் இன்ஜெக் ஷன்கள் நல்ல தர­மா­ன­தா­கவும் (Recombinent) என்று சொல்­லப்­ப­டு­கி­றது. சரி­யான அளவு இருக்க வேண்டும் இது ஒவ்­வொரு பெண்­ம­ணிக்கும் வெவ்­வே­றாக தேவைப்­படும்.எல்லா பெண்­ம­ணி­களும் ஒன்­றல்ல. எனவே மருந்­து­களும் அவை­களின் பலனும் வெவ்­வே­றாக இருக்கும். அதேபோல் முட்டை பையி­லி­ருந்து முட்­டைகள் வள­ரும்­போது அவற்றை கவ­ன­மாக பார்த்து டோஸ் அட்­ஜட்மேன்ட் செய்ய வேண்டும் இல்­லா­விடின் முட்­டையின் எண்­ணிக்கை குறை­வா­கவோ வள­ரா­மலோ அல்­லது வெடித்தோ காணப்­படும்.

எங்­க­ளது மையத்தில் இந்த கருத்தை மைய­மாக கொண்டு ஒவ்­வொரு பெண்­ம­ணிக்கும் உகந்­த­வாறு இன்ஜெக் ஷன் மற்றும் மருந்­துகள் கொடுத்து அவர்­களை நாமே நேர­டி­யாக கண்­கா­ணித்து அதி­க­மான தர­முள்ள முட்­டை­களை வழங்­கு­கிறோம். இதன்பின் IUF, IVF மற்றும் ICSI செய்­யும்­போது மிக சிறந்த வெற்­றியை எங்­களால் கொடுக்க இய­லு­கி­றது. இதை நாங்கள் Personalifed Infertility Care என்­கிறோம்.

இதோ ஓர் பெண்­ம­ணியின் அனு­ப­வத்தை கூறு­கிறேன்.

இவர் 36 வய­து­டை­யவர் கல்­யா­ண­மாகி 10 வரு­ட­மா­கி­றது. Unexplainad Infertility முட்­டையின் குவா­லிட்டி மேல் சந்­தேகம் இருந்­தது.. இவ­ருக்கு பல முறை சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. பெரிய மருத்­து­வ­ம­னை­களில் இரண்டு முறை IVF செய்து தோல்­வி­ய­டைந்­தது. ஒவ்­வொ­ரு­மு­றையும் கரு­முட்டை எண்­ணிக்கை குறை­வா­கவும் தரம் குறை­வாக இருப்­ப­துதான் இவ­ரது தோல்­விக்கு காரணம் என சொல்­லப்­பட்­டது. இதைக் கருத்தில் கொண்டு சிகிச்சை ஆரம்­பிக்­கப்­பட்­டது .அவரின் ஹோர்­மோன்கள் நல்ல நிலையில் இருந்­தன.நல்ல தர­மான இன்ஜக் ஷன்கள் போடப்­பட்­டன. எட்­டா­வது நாள் ஸ்கேன் செய்தபோது ஓரளவுக்கு முட்டைகள் வந்திருந்தன. நான் எதற்கும் இருக்கட்டுமே என்று DONOR EGGஐப் பற்றி பேசி வைத்தேன். இந்தமுறை நன்றாக இல்லாவிட்டால் அடுத்த முறை முயற்சி பண்ணுவோம் என்றார்கள். இந்தத் தம்பதியர் எங்களிடம் முழு நம்பிக்கையுடன் இருந்தார்கள். அவருக்கு முட்டை எடுத்தவுடன் எண்ணிக்கையின் தரம் நன்றாக இருந்தது.அது எனக்கு மிகவும் நம்பிக்கையளித்தது.அதனால் அவருக்கு ICSI செய்யப்பட்டது. கரு வைத்தபின் அவருக்கு தேவையான மருந்து கொடுக்கப்பட்டது. இன்று அவர் தாய்மையடைந்து மூன்று மாதங்கள் ஆகின்றன.

தொடர்புக்கு: இந்தியா: 0091 9841620779

இலங்கை 0778978792

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04