சீனாவில் ஹோட்டல் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் உயிரிழப்பு ; சுமார் 600 பேர் மீட்பு பணிகளில்

Published By: Vishnu

14 Jul, 2021 | 10:16 AM
image

சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 17 ஆக உயர்வடைந்தது.

சுசோ நகரில் திங்கள்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்த சிஜி கயுவான் ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து 36 மணிநேர தேடல் நடவடிக்கைக்கு பின்னர் மீட்புப் பணியாளர்கள் 23 பேரை கண்டு பிடித்தனர்.

அவர்களில் 6 பேர் உயிருடன் காணப்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க  கிரேன்கள், ஏணிகள், உலோக வெட்டிகள் மற்றும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அது மாத்திரமன்றி மீட்பு நடவடிக்கைக்கு 120 வாகனங்கள் உட்பட 600 க்கும் மேற்பட்டோர் மீட்பு படையினர் திரட்டப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தத்துக்கான காரணத்தை கண்டறிய புலனாய்வாளர்கள் ஆராய்வார்கள், மேலும் ஹோட்டலின் சட்ட பிரதிநிதிகள், மேலாளர்கள் மற்றும் கட்டிடத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் பணியாற்றியவர்கள் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று தளங்கள், 54 அறைகள் கொண்ட சிஜி கெயுவான் ஹோட்டல் 2018 இல் திறக்கப்பட்டது என்று சீன ஆன்லைன் முன்பதிவு பயன்பாடான சிட்ரிப் தெரிவித்துள்ளது.

சுசோ ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும், இது வரலாற்று கால்வாய்கள் மற்றும் பாரம்பரிய சீன தோட்டங்களுக்கும், ஒரு பெரிய வணிக மையத்திற்கும் பெயர் பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17