நடிகர் விஜய்க்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ள நீதிமன்றம் - காரணம் இதுதான்

Published By: Digital Desk 4

13 Jul, 2021 | 05:08 PM
image

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் ஒரு இலட்சம்  ரூபா அபராதத்தை செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ரோய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு சென்னை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்தது. 

மேலும் ஒரு இலட்சம் அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37