பாடசாலைகளில் இணைய வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

Published By: Digital Desk 2

13 Jul, 2021 | 05:05 PM
image

Ericsson (NASDAQ: ERIC) அனுசரணையில் தயாரிக்கப்பட்ட Economist Intelligence Unit (EIU) அறிக்கையில், குறைந்த புரோட்பான்ட் இணைப்புத் திறனைக் கொண்ட நாடுகளில், பாடசாலைகளில் இணைய வசதிகளை மேம்படுத்துவதனூடாக அந்நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தியை 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.   

தொற்றுப் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் கல்விக் கட்டமைப்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 190 க்கும் அதிகமான நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான காலப்பகுதியில், உலகளாவிய ரீதியில் காணப்படும் 1.6 பில்லியன் பாடசாலையில் கல்வியை தொடர முடியாத மாணவர்களில் சுமார் 100 மில்லியன் மாணவர்களுக்கு தமது வீடுகளில் இணைப்புத்திறன் வசதிகள் காணப்படுகின்றமையினூடாக தமது கல்விச் செயற்பாடுகளைத் தொடரக்கூடியதாகவுள்ளது.

தற்காலிகமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையானது, பாடசாலைகளில் பின்பற்றப்படும் கற்பித்தல் மற்றும் கல்வி பயிலல் நடவடிக்கைகளை வீடுகளில் இணைப்பை ஏற்படுத்துவதற்கான தேவையை உணர்த்தியுள்ளதுடன், கல்வியைத் தொடர்வதில் காணப்படும் டிஜிட்டல் இடைவெளியை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவையை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.   முறையாக கல்வியைப் பூர்த்தி செய்த பணியாளர்கள் புத்தாக்கமானவர்களாகவும், சிறந்த சிந்தனை வெளிப்பாட்டுத் திறனைக் கொண்டவர்களாகவும் அமைந்திருப்பார்கள் என்பதுடன், அதனூடாக பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்புகள் உருவாக்கத்துக்கு வழி கொள்வோராக அமைந்திருப்பார்கள்.

பாடசாலைகளில் இணைய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதனூடாக, மாணவர்களுக்கு தமது திறன்களையும் கற்றலை மேம்படுத்திக் கொள்வதற்கு சம வாய்ப்புகளை வழங்குவதாக அமைந்திருக்கும். இவற்றினூடாக புதிய தொழில்நிலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதுடன், சிறந்த வாழ்க்கைத் தரம் ஏற்படுத்தப்பட்டு, தனிநபர்களுக்கும், சமூகத்துக்கும் அனுகூலத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.   உலக பொருளாதார அமர்வு சர்வதேச போட்டிகர சுட்டெண் (2017) மற்றும் உலக வங்கி மனித மூலதன சுட்டெண் (2017) ஆகியன இணையம் மற்றும் தரமான கல்வி ஆகியவற்றுக்கிடையே தெளிவான தொடர்பை காண்பிக்கின்றன.

EIU பகுப்பாய்வினூடாக நாட்டில் பாடசாலை இணைப்புத்திறனில் 10 சதவீத அதிகரிப்பு காண்பிக்கப்படுவதுடன், தனிநபர் மொத்த தேசிய உற்பத்தி 1.1 சதவீதத்தால் அதிகரிப்பதை வெளிப்படுத்துகின்றது.   உலக இணைய பயன்பாட்டு வீதமானது கடந்த காலங்களில் பெருமளவில் அதிகரித்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் 17 சதவீதமாக காணப்பட்ட இந்தப் பெறுமதி 2021 இல் 50 சதவீதத்தை விட உயர்வாக அமைந்துள்ளது. இது பிராந்தியங்களில் சீரானதாக இல்லை. மேற்கு ஆபிரிக்க நாடான நைகரில் பாடசாலை இணைய இணைப்புத் திறனை மேம்படுத்துவதனூடாக, பின்லாந்து நாட்டில் நிலவும் மட்டத்தை நோக்கி சுமார் 20 சதவீதம் வரை மொத்த தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கும். 2025 ஆம் ஆண்டளவில் நபர் ஒருவருக்கு 550 அமெரிக்க டொலர்கள் என்பதிலிருந்து 660 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.  மற்றுமொன்றை மேற்கொள்வதற்கு நான்கு பிரதான செயற்பாடுகளில் இந்த அறிக்கை கவனம் செலுத்துகின்றது, 

 

  •  கைகோர்ப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது: பாடசாலை இணைப்புத் திறனில் காணப்படும் தடைகளை விஞ்சுவதற்கு பொது / தனியார் பங்காண்மை தந்திரோபாயம் என்பது அவசியமானதாக அமைந்துள்ளது.
  • அணுகல் மற்றும் சகாயத் தன்மை: இணையத்தை அணுகுவதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்புவது ஆரம்பப் புள்ளியாக அமைந்திருக்கும். இணைப்பின் தரம் மற்றும் செலவு போன்றன முக்கியமான காரணிகளாக அமைந்திருக்கும்.
  • இணைய மற்றும் டிஜிட்டல் சாதனங்களை கல்வியில் ஒன்றிணைத்தல்: பாடசாலை இணைப்புத்திறனுக்கான அணுகல் கிடைத்தவுடன், பாடவிதானத்தில் அது இணைக்கப்பட வேண்டும். தினசரி கற்பித்தல் செயற்பாடுகளில் தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதற்கு ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
  • ஒன்லைனில் மாணவர்களை பாதுகாத்தல்: பாடசாலை இணைப்புத்திறனூடாக மாணவர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். ஆரோக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட்ட ஒன்லைன் பயிலல் சூழல்களை ஏற்படுத்துவதற்கு மேலதிக படிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பான பாவனையை உறுதி செய்வதற்கு இணையப் பாவனை முறையாக நிர்வகிக்கப்பட வேண்டும்.  

சகல வயது மட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு இணைக்க இணைப்புத்திறனை பெற்றுக் கொள்வதை சாத்தியக்கூறாக பேணுவதற்கு, உலகளாவிய ரீதியில் காணப்படும் பொது, தனியார் மற்றும் அரச சார்பற்ற துறையைச் சேர்ந்த முன்னோடிகள் கைகோர்த்து, டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்து குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 இதன் பெறுபேறாக, Giga (பாடசாலைகளில் இணைப்புத்திறனை ஏற்படுத்தும் யுனிசெப் மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பாடல் ஒன்றியத்தின் முயற்சி) முயற்சிகளில் இவ்வாறான செயற்பாட்டாளர்களை நிதியளிப்பு, டேட்டா பகிர்வு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் இணைப்புத்திறனில் நிலைபேறான வியாபார மாதிரிகள் போன்ற பிரிவுகளில் இணையுமாறு Ericsson அழைப்பு விடுத்தது. யுனிசெப் உடன் மூன்றாண்டு கால பங்காண்மையினூடாக இந்தத் திட்டத்துக்கு தனது அர்ப்பணிப்பை Ericsson உறுதி செய்துள்ளது. இதனூடாக 35 நாடுகளில் தற்போதைய பாடசாலை இணைப்புத்திறன் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.  

Ericsson ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட EIU அறிக்கை : கல்விசார் இடைவெளியை குறைத்தல் – என்பதனூடாக Giga இன் இலக்கான  சகல பாடசாலைகளிலும் இணைப்புத்திறனை ஏற்படுத்துவது, அவற்றைச் சூழவுள்ள சமூகங்களில் 2030ஆம் ஆண்டளவில் இணைப்புத்திறனை ஏற்படுத்துவது என்பது எய்த கூடியது எனும் நம்பிக்கை எழுந்துள்ளது.  

Ericsson இன் நிலைபேறாண்மை மற்றும் கூட்டாண்மை பொறுப்புணர்வுகள் உப தலைவர் ஹெதர் ஜோன்சன் கருத்துத் தெரிவிக்கையில், “Giga அறிவிக்கப்பட்டவுடன், நாடுகளினுள் காணப்படும் டிஜிட்டல் இடைவெளியை குறைப்பதற்கு இந்தத் திட்டத்தினால் ஏற்படுத்தக்கூடிய நேர்த்தியான பங்களிப்பை நாம் புரிந்து கொண்டோம். இதனூடாக உலகளாவிய ரீதியில் காணப்படும் மாணவர்களுக்கு பிரகாசமான மற்றும் வெகுமதிகளுடன் கூடிய எதிர்காலத்துக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.” என்றார்.   அவர் மேலும் குறிப்பிடுகையில், “வியாபார தலைவர்கள், பொதுத் துறை தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே பங்காண்மை ஏற்படுத்திக் கொள்வதனூடாக இந்த விடயம் தொடர்பில் தீர்வுகளை எய்தி பெருமளவான வாழ்க்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பது அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் துறைகளைச் சேர்ந்த ஒவ்வொரு செயற்பாட்டாளராலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்த அறிக்கையை வாசித்து, Giga திட்டத்துடன் கைகோர்த்து, இந்த முக்கியத்துவம் வாய்ந்த இலக்கை எய்துவதற்கு பங்களிப்பு வழங்குமாறு அனைத்து துறைசார் பங்காளர்களையும் ஊக்குவிக்கின்றோம்.” என்றார்.   யுனிசெப் பிரதி நிறைவேற்று பணிப்பாளர், பங்காண்மைகள் சார்ளட் பெட்ரி-கோர்னிட்ஸ்கா கருத்துத் தெரிவிக்கையில், “ஒன்றிணைந்து, உலகளாவிய ரீதியில் இணைப்புத்திறன் இடைவெளி காணப்படும் பாடசாலைகளை நாம் இனங்காண்கின்றோம்.

துறைகளிடையே நாம் கைகோர்த்து, பாடசாலைகளில் இணைப்புத்திறனை ஏற்படுத்துவது முக்கியமானதாகும். அதனூாக, தரமான டிஜிட்டல் பயிலல் அனுபவத்தை வழங்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், ஒவ்வொரு மாணவராலும் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

 அறிக்கை

EIU அறிக்கையில், பாடசாலைகளில் இணைப்புத்திறன் மேம்படுத்தப்படுவதனூடாக எவ்வாறு கல்விசார் வெளிப்பாடுகளை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில் நிலை வாய்ப்புகளை ஏற்படுத்தி, உயர் பொருளாதார செயற்பாடுகள் மற்றும் சமூக வளர்ச்சியை எய்த முடியும் என்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான இந்த தனிநபர்-சார் அனுகூலங்களினூடாக, உயர் வருமானங்கள், சிறந்த சுகாதாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த நலன் போன்றவற்றை எய்தக்கூடியதாக இருக்கும் என்பதை இந்த அறிக்கை காண்பித்துள்ளது. அனுகூலங்கள் மாணவர்களுக்கு அப்பால் நீடிக்கப்படக்கூடியதாக அமைந்திருப்பதுடன், பரந்தளவு சமூக அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாக அமைந்திருக்கும்.  இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள இதர பாடசாலை இணைப்பு அனுகூலங்களில் அடங்கியிருக்கும் அம்சங்களாவன:

  • கல்வியின் தரம் அதிகரிப்பு
  • Blockchain, big data, machine learning மற்றும் artificial intelligence போன்ற வளர்ந்து வரும் துறைகளில் சிறந்த அணுகல்
  • புத்தாக்கம் மற்றும் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தத் தூண்டும் உற்பத்தித்திறனான பணியாளர் குழுவை உருவாக்கும்
  • தொழில் வாய்ப்புகள் உருவாக்கம்
  • சமூக அபிவிருத்தி
  • பொருளாதார அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தல்

Giga திட்டம் பற்றி மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளவும், இதில் எவ்வாறு கைகோர்ப்பது என்பது பற்றி அறிந்து கொள்ளவும் www.gigaconnect.org எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும். 











முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58