அரசிலிருந்து வெளியேறி ஆட்சி மாற்றத்தை  ஏற்படுத்தும் நோக்கம் சுதந்திரக் கட்சிக்கு கிடையாது - மஹிந்த  அமரவீர

Published By: Digital Desk 3

13 Jul, 2021 | 04:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சிக்கு சாதகமான அமையும் அரசியல் தீர்மானத்தை சுதந்திர கட்சி ஒருபோதும் எடுக்காது. அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை  ஏற்படுத்தும் நோக்கம் கிடையாது. 

சுதந்திர கட்சிக்கு அரசாங்கத்திற்குள் பிரச்சினை உள்ளது அப்பிரச்சினைகளுக்கு  பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு  எட்டப்படும் என  சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த  அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இடம் பெற்ற  நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தில் பிரதான பங்காளி கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளது.  பொதுஜனபெரமுனவிற்கும், சுதந்திர கட்சிக்கும் இடையில் கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. பிரதேச மட்டத்தில் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் நிர்வாக ரீதியில்  புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன  பெரமுன கூட்டணிக்குள் தற்போது தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் எதிர்வரும 21 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தல்களில்  சுதந்திர கட்சி வழங்கிய பங்களிப்பினை ஜனாதிபதி, மற்றும் பிரதமர் நன்கு அறிவார்கள்.

 எதிர்க்கட்சிக்கு சாதகமான அமையும் வகையில் ஒருபோதும் அரசியல்  தீர்மானங்களை எடுக்கமாட்டோம்.  அரசாங்கத்தில் இருந்து  வெளியேறி எதிர்க்கட்சியுடள் ஒன்றினைந்து ஆட்சி மாற்றத்தை  ஏற்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

 சுதந்திர கட்சிக்கும்,  ஆளும் கட்சிக்கும் இடையில் தற்போது கருத்து வேறுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ள பிரச்சினைக்கு உயர்மட்ட தரப்பினால பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு பெற்றுக் கொள்ளப்படும். சுதந்திர கட்சியை விமர்சித்து ஒரு தரப்பினர் அரசியலில் பிரபல்யமாக முயற்சிக்கிறார்கள். இவ்வாறான செயற்பாட்டால் எவ்வித பாதிப்பும் சுதந்திர கட்சிக்கு ஏற்படாது..

 கூட்டணியை பலப்படுத்தல் குறித்து ஜனாதிபதி, பிரதமர் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள்.  கூட்டணியின் அனைத்து பங்காளி கட்சி தரப்பினரையும் ஒன்றினைத்து எதிர்வரும் வாரங்களில் பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக இடம் பெறும். எக்காரணிகளுக்காகவும் கூட்டணியையும், அரசாங்கத்தையும் பலவீனமடைய இடமளிக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47