மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை முதல்

Published By: Vishnu

13 Jul, 2021 | 08:31 AM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாணங்களுக்கு  இடையிலான பொது போக்குவரத்து சேவை  அத்தியாவசிய சேவையாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும்.  

அத்தியாசிய தேவைகளை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர்ந்து  அமுலில் இருக்கும் என போக்குவரத்து மற்றும் சமூதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர்  திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை  முடக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம்  ஒரு சில பகுதிகளில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து அமுலில் உள்ளது. இதனை விரிவுப்படுததும் வகையில் தற்போது மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவையை மட்டுப்படுத்திய வகையில் நாளை (14) முதல் மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையில்  தனியார்  மற்றும் அரச பேருந்துகளும், புகையிரதங்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்  நாளை முதல்  பொது  போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும்.    அத்தியாவசிய சேவையை கருத்திற் கொண்டு காலை மற்றும் மாலை அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் சுற்று தாக்கத்தின் பின்னர்  மாகாணங்களுக்கு  இடையிலான பொது போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்டன.  

புதுவருட கொவிட்  கொத்தணியின் காரணமாக கடந்த மே மாதம் தொடக்கம் சுமார்  இரண்டு மாத காலம்  மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தன. 

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி  பொது போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிக்க கொவிட் -19 வைரஸ் ஒழிப்பு  மத்திய நிலையம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24