டெல்டா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பு - சந்திம ஜீவந்தர

Published By: Digital Desk 4

12 Jul, 2021 | 09:20 PM
image

(நா.தனுஜா)

கொவிட் - 19 வைரஸின் திரிபான டெல்டா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் இன்றைய (திங்கட்கிழமை) தினத்திலிருந்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியநிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனாவால் ஒரே நாளில் 100 பேர் மரணம் - BBC News தமிழ்

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் 96 மாதிரிகளை அடிப்படையாகக்கொண்டு மேற்படி பரிசோதனைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அடையாளங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மாதிரிகள் எழுந்தமானமான அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு, மேற்படி டெல்டா வைரஸ் தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளை எதிர்வரும் ஒருவாரகாலத்திற்குள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் விசேட வைத்தியநிபுணர் சந்திம ஜீவந்தர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுகாதாரப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 20 இற்கும் அதிகமானோர் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது இனங்காணப்பட்டிருக்கும் அதேவேளை, அவர்களில் பெரும்பான்மையானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02