பொறுப்புகூற வேண்டியவர்களின் கனத்த மௌனம்….! 

Published By: Digital Desk 2

12 Jul, 2021 | 05:08 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாட் சம்பளம்  சம்பள நிர்ணய சபையின் ஊடாக வழங்கப்பட்ட நாளிலிருந்து பல தோட்டப்பகுதிகளில்சர்ச்சைகளும் தொழிலாளர் போராட்டங்களும்  ஆரம்பித்து விட்டன.  

சம்பள நிர்ணய சபையின் உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாதுஎன்றும் அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும்   பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள்  வழக்கு தொடர்ந்தாலும் அவர்களின்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் கூறி விட்டது. 

அதன்படி வர்த்தமானி அறிவிப்பின் கீழ் அவை அத்தொகையைவழங்க ஆரம்பித்தன. எனினும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதன் காரணமாகதீர்ப்பு வரும் வரை கம்பனிகள் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும். 

எனினும் அதற்கு இசைந்து கொடுக்காத  சில கம்பனிகள் தொழிலாளர்களின் கொழுந்து எடையை அதிகரித்து நாளொன்றுக்கு20 கிலோ எடுத்தாலே ஆயிரம் ரூபாவழங்க முடியும் என்ற கெடுபிடிகளைஏற்படுத்தி வருகின்றன.

சில தோட்ட நிர்வாகங்கள் இது குறித்து எழுத்து மூலமாகவேஅறிவித்திருக்கின்றன. 20 கிலோவுக்கு குறைவாக எடுக்கும் தொழிலாளர்களுக்கு 700 ரூபாவிலிருந்து800 வரையான நாட்சம்பளமே வழங்கப்படுகின்றன. 

ஆனால் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவைபெற்றுக்கொடுத்து விட்டோம் என பட்டாசுகள் கொழுத்தி கேக் வேட்டி பாற்சோறு விநியோகித்தவர்களைதற்போது காண முடியாதுள்ளது. கூட்டு ஒப்பந்தம் இல்லை என்று கம்பனிகள் கூறினாலும் தொழில்சட்டங்கள் அங்கு உள்ளன. 

அப்படியானால் தொழிலாளர்களின் நலன் சார்ந்த புதிய கூட்டுஒப்பந்தம் ஒன்றுக்கு ஏன் இவர்களால் போக முடியாது என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அதைவிடுத்து  பார்த்தாலும்  தொழில் பிணக்கு சட்டங்கள்மூலம் இதற்கு இலகுவாக தீர்வு காண முடியும் என்று உறுதிப் பட தெரிவித்திருக்கிறார் சட்டத்தரணிஇ.தம்பையா. 

ஆனால் அதற்கும் ஏன் இந்த தொழிற்சங்கங்கள் பின்னிற்கின்றனஎன்பது தெரியவில்லை. தொழிலாளர்களுக்கு இந்த விவகாரத்தில் தீர்வை தரும் விடயங்கள் தம்மத்தியிலிருந்துமட்டுமே வர வேண்டும் என்று நினைக்கின்றார்களோ தெரியவில்லை. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-11#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22