ஒரே நேரத்தில் இரு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று - பெல்ஜியம் பெண் மரணம்

Published By: Digital Desk 3

12 Jul, 2021 | 04:48 PM
image

பெல்ஜியம் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 90 வயது பெண் ஒருவர் ஆல்பா மற்றும் பீட்டா வகை வைரஸ்களால் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பெல்ஜியத்திலுள்ள ஆல்ஸ்ட் நகரிலுள்ள வைத்தியசாலையில் மார்ச் 3ஆம் திகதி ஒரு பெண்மணி கொரோனா

அவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் அவருடைய ஒட்சிசன் அளவு சீராக இருந்தபோதிலும், அடுத்தடுத்த நாட்களில் நிலைமை மோசமாகி 5 நாட்களில் உயிரிழந்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு ஆல்பா மற்றும் பீட்டா வகை வைரஸ்கள் இரண்டும் தாக்கியிருந்ததை மருத்துவர்கள் சோதனையில் கண்டறிந்திருக்கின்றனர். 

ஆல்பா வகை பிரிட்டனிலும், பீட்டா வகை தென் ஆப்பிரிக்காவிலும் பரவி வந்த நேரத்தில், பெல்ஜியத்தில் இருந்த பெண்ணுக்கு இரண்டு வகை பாதிப்புகளும் இருந்தது மருத்துவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இதுபற்றி மூலக்கூறு விஞ்ஞானி ஆனி கூறுகையில்,

 ‘’பெல்ஜியத்தில் ஆல்பா மற்றும் பீட்டா வகைகள் பரவிய நேரத்தில் இந்த பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆல்பா மற்றும் பீட்டா வகைகளால் பாதிக்கப்பட்டிருந்த இருவேறு நபர்களிடமிருந்தும் இந்த பெண்ணுக்கு தொற்று பரவியிருக்கிறது. ஆனால் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. அதேசமயத்தில் இருவேறு வகைகளும் ஒரே உடலில் எவ்வாறு வேகமாக பரவியிருக்கும் என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன’’ என்று கூறியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10