இந்திய உதவியில் காஷ்மீரின் - ரம்பன் உள்ளூர் மக்களுக்காக புதிய பாலம்

Published By: J.G.Stephan

12 Jul, 2021 | 03:12 PM
image

(ஏ.என்.ஐ)
பழைமையான பெய்லி பாலத்தை புதுப்பித்து புதிய பாலம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த பாலமானது. ஜம்மு - காஷ்மீரின் ரம்பன் பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமைவதுடன் அதனை உள்ளூர் மக்களும் வரவேற்றுள்ளனர். மத்திய பொதுப்பணித் துறையால் 1963 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பாலமானது 2019 ஜூன் மாதம் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டது.

ராம்பன் பகுதியிலிருந்து ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் இந்த பாலம் பல முக்கிய நகரங்களுக்கான இணைப்பாகவும் உள்ளது. இந்த புதிய பாலம் அப்பகுதியின் பொது மக்களுக்கு பயனளிக்கும். இலகுவான வாகனங்களுக்கு கூட போக முடியாத நிலையில் ஒரு தடவையில் ஒரு வாகனம் மாத்திரமே போகக் கூடியதாக காணப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கு பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர்கள் கூறுகையில், 'கட்டுமானத்திற்கு உட்பட்ட பாலம் 270 மீற்றர் நீளமும் 50 மீற்றர் உயரமும் கொண்டதாக இருக்கும். இரட்டை வழிப்பாதை பாலமாக இது அமைவதுடன் இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட உள்ளது. சுமார் ரூ .43 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52