2 வருட காத்திருப்பு 

Published By: Digital Desk 2

12 Jul, 2021 | 02:55 PM
image

குமார் சுகுணா

கடந்த 2019 ஆம் ஆண்டு  இயக்குனர்  எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட   படம் வலிமை (Valimai). ஆனால் இரண்டு வருடங்களாகியும்  திரைப்படம் தொடர்பான எந்த விடயமும் வெளியாகவில்லை. குறைந்தது முதல் பார்வை போஸ்டர் கூட வெளியாகவில்லை. இதற்கு பின்னர்  உருவான படங்கள் கூட பல திரைக்கு வந்துவிட்டன. குறிப்பாக விஜய் – ரஜினி போன்றவர்கள் கூட இந்த இடைவெளியில் அடுத்து அடுத்து இரண்டு படங்களை முடித்துவிட்டனர்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தொடங்கியது. ஆனால் தலைப்பை அறிவித்து படப்பிடிப்பை தொடங்கிய படக்குழுவினர்,   2020 தீபாவளியை ஒட்டி இந்தப் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தனர். ஆனால், கொவிட் - 19 காரணமாக படப்பிடிப்பு நடுவில் நிறுத்தப்பட்டது. இந்தப் படம் குறித்த செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. படத்திற்கான பெர்ஸ்ட் லுக் எனும் முதல் பார்வையை  கூட வெளியிடவில்லை.  இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்த நிலையில், அஜித் குமாரின் ரசிகர்கள் அவ்வப்போது டுவிட்டரில் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்பதை வழக்கமாக வைத்திருந்தனர். பிரபலங்களையும் tag செய்துவந்தனர். இது பல தருணங்களில் கேலிக்குள்ளானது.

 சமூக வலைத்தளங்கள் தாண்டி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட காணொளி சமூக  வலைதளங்களில் வைரலாக பரவியது. முதல்வர் பழனிச்சாமியிடம் 'வலிமை அப்டேட் 'என ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட்  பார்க்க சென்ற அஜித் ரசிகர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடம் வலிமை அப்டேட் கேட்டது. கிரிக்கெட் உலகையும் திரும்பிபார்க்க வைத்தது. மைதானத்தில் எல்லை கோட்டுக்கு அருகில்  மொயின் அலி வந்தபோது, அலி பாய்  என அழைத்ததும் அவர் திரும்பி பார்த்தார். அப்போது அவரிடம் ,  வலிமை அப்டேட் எங்கே என கேட்டனர். இந்த காணொளியும் வைரலானது.

இது ஒருபுறம் இருக்க  இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினிடமும் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர் அஜித் ரசிகர்கள். கருத்து தெரிவித்த அவர்,'வலிமை அப்டேட்டை எப்படி கிரிக்கெட் டுடன் தொடர்பு கொள்வது' என யோசிச்சுட்டே இருக்கும் போது மொயின் அலி வந்து' வட் இஸ் வலிமை' என என்னிடம் கேட்டார், .அவரையும் அழைத்து அப்டேட் கேட்டுள்ளனர், என்றார்.

இதைத் தாண்டி தமிழகம் வந்த  இந்திய பிரதமர் மோடியிடம் வலிமை அப்டேட் கேட்டனர். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஒரு நடிகரின் திரைப்படம் தொடர்பில் நாட்டின் பிரதமரிடம் தகவல் கேட்பது என்பது புதுமைதான். பிரதமரிடம் மட்டும் இன்றி கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபல்யங்களிடம் தொடர்ந்து நடிகர் அஜித்தின் 'வலிமை' திரைப்படம் தொடர்பில் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட விடயம்  எதற்கும் வாய்திறக்காத அஜித்தை வாய்திறக்க வைத்தது.

எப்போதுமே தன் படங்கள் குறித்துப் பேசவிரும்பாத அஜித், ரசிகர்களின் இந்தச் செயல் தொடர்பாக வேதனையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அஜித் கூறியதாவது:

"என்‌ மீதும்‌ என்‌ படங்களின்‌ மீதும்‌ அபரிமிதமான அன்புக்‌ கொண்டு இருக்கும்‌ எதையும்‌ எதிர்பாராத அன்பு செலுத்தும்‌ என்‌ உண்மையான ரசிகர்களுக்கும்‌, மக்களுக்கும்‌ என்‌ மனமார்ந்த வணக்கம்‌.

கடந்த சில நாட்களாக என்‌ ரசிகர்கள்‌ என்ற பெயரில்‌ நான்‌ நடித்து இருக்கும்‌ "வலிமை" சம்பந்தப்பட்ட அப்டேட்கள் கேட்டு அரசு, அரசியல்‌, விளையாட்டு மற்றும்‌ பல்வேறு இடங்களில்‌ சிலர்‌ செய்து வரும்‌ செயல்கள்‌ என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம்‌ குறித்த செய்திகள்‌ உரிய நேரத்தில்‌ வரும்‌. அதற்கான காலத்தை, நேரத்தை நான்‌ தயாரிப்பாளருடன்‌ ஒருங்கிணைந்து நிர்ணயம்‌ செய்வேன்‌. அதுவரை பொறுமையுடன்‌ காத்திருக்கவும்‌. உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில்‌. நான்‌ எடுக்கும்‌ முடிவுகள்‌ என்‌ தொழில்‌ மற்றும்‌ , சமூக நலன்‌ சார்ந்தவை. நம்‌ செயல்களே சமூகத்தில்‌ நம்‌ மீது உள்ள மரியாதையைக் கூட்டும்‌. இதை மனதில்‌ கொண்டு ரசிகர்கள்‌ பொது வெளியிலும்‌, சமூக வலைத்தளங்களிலும்‌ கண்ணியத்தையும்‌, கட்டுப்பாட்டையும்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌ எனக் கேட்டுக்‌ கொண்டார்.

அஜித்தின் இந்த அறிக்கைக்கு பல்வேறு ரசிகர்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து  வந்ததோடு "உங்களது வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம்" என சிலர் அஜித்தின் அறிக்கையை கட்அவுட் வைத்தனர்.

தொடர்ந்து அவரது ரசிகர்கள் சில காலம் அமைதியாக இருந்தாலும் மீண்டும் வலிமை அப்டேட் கேட்கத் தொடங்கினர். அஜித்தின் பிறந்த நாளன்று அதாவது கடந்த மே மாதம் 1ஆம் திகதிபெர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அன்று கொரோனா அச்சம் காரணமாக எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில்   இங்கிலாந்தில்  நடைபெற்று வரும்  உலக கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டியிலும், யூரோ கால்பந்து போட்டிகளிலும் அஜித்தின் ரசிகர்கள்   வலிமை அப்டேட் கேட்டனர்.  இது மிக பெரிய ரைவலாகியது.

வலிமை திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் , தல வலிமை திரைப்பட அப்டேட் வேண்டுமென அடம் பிடித்து வந்த  நிலையில், கமல், விஜய் சேதுபதி, ரஜினி படங்களின் அப்டேட்டுகள்  தொடர்ந்து வெளிவரத்தொடங்கின. இது அஜித் ரசிகர்களை மீண்டும் வேதனை படுத்தியது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் நேற்று அஜித்தின் வலிமை அப்டேட் வெளியானது. நேற்று மாலை 6 மணிக்கு 'வலிமை' பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வெளியான இந்த மோஷன் போஸ்டருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அஜித்தின் மாஸான லுக் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் மெர்சலான தீம் மியூசிக் என அஜித் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மோஷன் போஸ்டரில் வலிமை படம் இந்தாண்டு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது  ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்சியே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04