யாழில் வாள்வெட்டில் முடிந்த ஆலய நிர்வாக பிரச்சினை: காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி..!

Published By: J.G.Stephan

12 Jul, 2021 | 11:44 AM
image

யாழில் ஆலய நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து ஆலய வளாகத்தினுள் வைத்தே வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

யாழ்ப்பாணம் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவருக்கும், மற்றுமொருவருக்கு ஆலயம் தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் ஆலய நிர்வாகத்தை சேர்ந்தவரை மற்றைய நபர் தன் உடமையில் மறைத்து வைத்திருந்த வாளினால் அவரை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

குறித்த நபர் தப்பியோடும் போது அவர் வைத்திருந்த வாள் தவறி விழுந்துள்ளது. அதனை அங்கிருந்தவர்கள் மீட்டு வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

அதேவேளை வாள் வெட்டுக்கிலக்கான நபரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35