(சிவா ஸ்ரீதரராவ்)

இரத்தினபுரி -  அபுகஸ்தன்ன, மூக்குவத்தை தோட்டத்தில் மின்சார கோளாறு காரணமாக ஆறு லயன் குடியிருப்புக்களில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மேற்படி ஆறு குடியிறுப்புக்களில் உள்ள பொருமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதோடு, இவ் குடியிருப்புகளில் தங்கியிருந்த எவருக்கும் உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லை. தோட்ட மக்களின் முயற்றியால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மேற்படி பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட தோட்ட மக்களை அப்பிரதேச ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.