சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 25 கடற்படை குழுக்கள்..!

Published By: J.G.Stephan

11 Jul, 2021 | 03:11 PM
image

நாட்டில் தற்போது காணப்படும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் மீட்பு பணிகளை முன்னெடுக்கவும் கடற்படையின் 25 குழுக்கள் நடாளாவிய ரீதியில் செயற்படுவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

காலி, களுத்துறை  மற்றும் இரத்தினப்புரி ஆகிய மாவட்டங்களில் இந்த கடற்படை குழுக்கள்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.

மேலும், களனி கங்கை, கலு கங்கை , கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் வெள்ளபெருக்கு குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அடுத்து வரும் 24 மணித்தியாலயத்தில் களனி கங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரித்து தெஹியோவிட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, கடுவெல , கொலன்னாவ, மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளின் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26