வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை ; நம்பிக்கைக்குரிய ஊழியரே பிரதான சூத்திரதாரி

Published By: Priyatharshan

03 Sep, 2016 | 11:29 AM
image

கடத்திக் கொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகரான மொஹமட் சுலைமான் சகீபின் விற்பனை நிலையத்தில் 8 வருடங்களாக மிகவும் நேர்மையான முறையில் ஊழியராக கடமை புரிந்தவரே பிரதான சூத்திரதாரியென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பம்பலப்பிட்டி கோடிஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் சகீப் கடத்திக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நேற்று மதியம் கைதான நபருடன் சந்தேகநபர்கள் 8 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியவில் வர்த்தகர் சுலைமான், விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டுவிட்டு காரில் சென்று வீட்டு வாசலில் இறங்க முற்பட்ட வேளை அவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டிருந்தார். 

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டது.

 

இதற்கமைய பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் விசேட ஆலோசனைக்கமைய இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பிரதான பொறுப்பு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி மாலை மாவனெல்ல ஹெம்மாதகம வீதியிலுள்ள யுகுலகல பிரதேசத்திலிருந்து இனம்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

பம்பலப்பிட்டி பிரதேசத்தில்  ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கடத்தப்பட்ட கோடிஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் சகீப் என்பவருடைய சடலம் என அடையாளம் காணப்பட்டது.

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அத்தியட்சகர் நிசாந்த சொய்சா, உதவிபொலிஸ் அத்தியட்சகர் ஜயதிலக, போன்றோரின் மேற்பார்வையின் கீழ் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இரசாயன பகுப்பாய்வு அறிக்கை, தடயங்கள் என்பவற்றின் அடிப்படையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பகீர் ஹல்லம் மொஹமட் பசீர் (வயது 24) என பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இனம் காணப்பட்டார்.

இந்தியா,சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலிருந்து ஆடைகள் மற்றும் துணிவகைகளை இறக்குமதி செய்து புறக்கோட்டை 3 ஆம் குறுக்கு தெருவில் மொத்த விற்பனை நிலையமொன்றை உயிரிழந்த கோடிஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் சகீப் நடத்திவந்துள்ளார்.

சந்தேக நபர் இவரது விற்பனை நிலையத்தில் 8 வருடங்களாக மிகவும் நேர்மையான ஊழியராக தொழில் செய்துள்ளார். 

எனவே அவரது நேர்மையின் நிமித்தம் விற்பனை நிலையத்தின் முக்கிய பொறுப்புக்களை கையாளும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறிப்பாக வங்கியில் பணத்தை வைப்பிலிடல், வங்கியிலிருந்து பணத்தை மீளக்பெறுதல் போன்ற முக்கிய கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் இவரின் மூலமாக இடம்பெற்றுள்ளது.

நாட்கள் செல்லச்செல்ல விற்பனை நிலையத்தில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றங்கள் இடம்பெறுவதை அவதானித்த குறித்த சந்தேக நபர் தனது முதலாளியிடமிருந்து இரண்டு கோடி ரூபாவை கப்பமாக பெற்றுக்கொள்வதற்காக மிகவும் சூட்சுமமான முறையில் அவரை கடத்தி பணத்தை கப்பமாகப்பெற திட்டம்தீட்டினார்.

குறித்த நடவடிக்கைக்கு இரவு நேரங்களில் தன்னுடன் மதுஅருந்துவதற்காக ஒன்றுசேரும் புறக்கோட்டை நாட்டாண்மைகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் ஆகியோரை இணைந்துக்கொண்டார்.

நடவடிக்கைக்கு பயன்படுத்துவதற்காக மட்டக்குளி பிரதேசத்திலிருந்து 43,000 ரூபாவுக்கு வேன் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டுள்ளதுடன், அதற்காக தனது மனைவியின் தங்க நகைகளையும் அடகு வைத்துள்ளார். 

சம்பவ தினமான ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி வர்த்தகரின் தந்தை வெளிநாடு சென்றிருந்தமையால், அன்றைய தினம் இரவு வர்த்தகரை கடத்தி தந்தை இலங்கைக்கு திரும்பும் போது கப்பப்பணத்தை பெற்றுக்கொள்ளவதே கடத்தல்காரரான சந்தேக நபரின் திட்டமிட்டம்.

எனினும், கடத்தி செல்லும் போது வர்த்தகளர் அவர்களின் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்தமையால், வெட்டுக் கத்தியின் பின்பகுதியால் தலையின் பின் பக்கமாக தாக்கி வேனில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே வர்த்தகர் தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது .

அதன்பின்னர் சடலத்தை வைத்துக்கொண்டு கப்பப்பணத்தை அவரது தந்தையிடமிருந்து பெற்றுக்கொள்ள எத்தனித்த போதும் அந்த முயற்சி கைகூடாமையினால் சடலத்தை மாவனெல்ல பிரதேசத்தில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, கேகாலையின் வெவ்வேறு பகுதிகளில் வர்த்தகரின் தொலைபேசி , உள்ளாடைகள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி, போன்றவற்றை  எறிந்தும் புதைத்தும் உள்ளனர்.

கடல்மார்க்கமாக வெள்ளவத்தைக்கு சென்று அங்கிருந்து தெஹிவளைக்கு சென்று மீண்டும் பொரளைக்கு வந்து அங்கிருந்து பொலிஸ் நடமாட்டங்கள் அற்ற இடங்களின் ஊடாக பெலியகொடைக்கு வந்து அங்கிருந்தே வெவ்வேறு வழிகளால் கேகாலைக்கு சென்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சந்தேகநபர் தன் மீது எவருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்கு சம்பவ தினத்துக்கு மறுநாள் மதியம் 12 மணியளவில் விற்பனை நிலையத்துக்கு கடமைக்கு வந்துள்ளார்.

எனவே இதுபோன்ற சந்தர்ப்ப சாட்சியங்கள் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு உதவியாக இருந்ததாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51