அரசியல் கட்சிகளும் கூட்டுக்களும் கட்டமைப்பை மாற்ற வேண்டியதில்லை: பொதுத்தளத்தில் பணியாற்றவே அழைப்பு - ரெலோ

Published By: J.G.Stephan

11 Jul, 2021 | 11:25 AM
image

(ஆர்.ராம்)

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுத்தளமொன்றில் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதையே இலக்காக கொண்டு ஒருங்கிணைக்கும் பணியை ரெலோ முன்னெடுத்துள்ளதே தவிர,  எந்தவொரு அரசியல் கட்சிகளினதும், கூட்டுக்களினதும் கட்டமைப்புக்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று ரெலோ தெரிவித்துள்ளது.

ரெலோவின் முயற்சியில், இலங்கைத் தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ மற்றும் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி ஆகிய தரப்புக்கள் பொதுத்தளத்தில் பணியாற்றுவது பற்றி பேச்சுக்களை முன்னெடுத்திருந்தது. இந்நிலையில் கொழும்பில் கூடிய தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக பலத்த விமர்சனங்களும், எதிர்மறையான நிலைப்பாடுகளும் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்த ரெலோ அடுத்த கட்டமாக எவ்விதமான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது என்பது தொடர்பில் வினவியபோது அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியத்தளத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டினையே கொண்டிருக்கின்றன என்பது அத்தரப்புக்கள் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள், செயற்பாடுகள் மூலமாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

அவ்வாறான நிலையில் தான் ரெலோ பொதுப்பிரச்சினைகள் தொடர்பில் பொதுத்தளமொன்றில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்படுவதென்றும் பிரதான விடயங்களான வடக்கு கிழக்கு இணைப்பு, இனப்பிரச்சினைத்தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இணக்கப்பாட்டை எட்டக்கூடிய விடயங்களில் இணைந்து செல்வதென்றும் கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள அரசியல் தரப்புக்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்தது.

இந்தச் செயற்பாடானது புதிய கூட்டொன்றை முன்னெடுப்பது என்று கருதுவது தவறானதாகும். எந்தவொரு அரசியல் கட்சியும், கூட்டுக்களும் தமது கட்டமைப்புக்களை மாற்ற வேண்டியதில்லை. அக்கட்சிகளும், கூட்டுக்களும் இணைந்து செல்லக்கூடிய விடயங்களில் இணைந்து செயற்பட முடியும் என்ற புரிதல் முதலில் ஏற்பட வேண்டியது அவசியமாகின்றது.

குறிப்பாக, தமிழரசுக்கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தில் சந்தேகங்களின்றி சரியான புரிதலைக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. அதேநேரம், கடந்த காலத்தில் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையின்போது ஆயுத விடுதலை இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தே பேச்சுக்களின் ஈடுபட்டன. திம்புக் கோட்பாட்டை உருவாக்கியிருந்தன.

அண்மைய காலங்களில் கூட கொள்கை அளவில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அங்கீகரிப்பதை மறுதலித்திருந்த தரப்புக்கள் அவர் தலைமையில் நடைபெறும் அரச எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளன.

ஆகவே, தற்போதைய நிலைமையில் தமிழ் மக்களின் விடயங்களை கையாள்வதற்கு வலுவானதொரு தரப்பாக தமிழ்த் தேசியத்தரப்புக்கள் இருக்க வேண்டும் என்பதே ரெலோவின் நிலைப்பாடே தவிரவும் அதற்கு அப்பால் எவ்விதமான தனிப்பட்ட அரசியல் நலன்களும் இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46