ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 2020 ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தை அமைக்கும் என மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆண்டு நிறைவு விழாவினை வரலாற்று சிறப்புமிக்க தினமாக கொண்டாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

சுதந்திரக்கட்சின் ஆண்டு நிறைவு விழாவில் சிலர் பங்குகொள்ள முடியாது என தெரிவித்து வருகின்றனர். எவ்வாறாயினும் சுதந்திரக்கட்சியின் பொரும்பாலானவர்கள் கலந்துக்கொள்வார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.