கடன்வழங்கல் வசதி வீதத்தினை தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதற்குத் தீர்மானம் - இலங்கை மத்திய வங்கி

Published By: Digital Desk 3

10 Jul, 2021 | 08:22 PM
image

(நா.தனுஜா)

மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் என்ற அவற்றின் தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபைக்கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் என்ற அவற்றின் தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேரண்டப் பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாகப் பரிசீலித்ததன் பின்னர் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தினால் 2021 முதலாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் இன்னமும் வெளியிடப்படாத போதிலும், பொருளாதாரத்தின் பல்வேறு முக்கிய துறைகளுக்கான குறிகாட்டிகள் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்டதையும்விட வலுவாளதொரு மீட்சியைக் காண்பிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலை மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக உள்நாட்டுப் பொருளாதார செயற்பாடுகளுக்கு ஏற்பட்ட இடையூறுகள் 2021 இரண்டாம் காலாண்டின் போதான மீட்சியை ஓரளவிற்கு நலிவடையச்செய்தன.

இருப்பினும் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கல் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை நீக்குதல் ஆகியவற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாரத்தில் ஏற்பட்ட தாக்கம் ஓரளவிற்குக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனூடாக 2021 ஆம் ஆண்டில் அடையக்கூடிய சுமார் 5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதமானது, நீண்டகால அடிப்படையில் நிலைத்திருக்கக்கூடிய பொருளாதார மீட்சியொன்றுக்கு வழிவகுக்கும்.

வர்த்தகப் பற்றாக்குறை நிலைமையைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டின் அதேகாலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஜனவரி - மேமாதம் வரையிலான காலப்பகுதியில் மேலும் விரிவடைந்திருந்தது. அதுமாத்திரமன்றி கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள சவால்கள் சுற்றுலாத்துறையின் மீட்சியில் தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தியுள்ளன என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44