ஜனாதிபதிக்கு இன்று 65 ஆவது பிறந்ததினம்

Published By: Priyatharshan

03 Sep, 2016 | 10:05 AM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது 65 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுகின்றார். 

1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி கம்பஹா யாகொடவில் பிறந்த மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் சிறு வயதிலேயே பொலனறுவைக்கு குடிபெயந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 17 ஆவது வயதில் ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் அரசியல் பயணத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். 

சுதந்திரக் கட்சிக்குள் அவரை அழைத்து வந்த அன்றைய பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லீலாரத்ன விஜேசிங்க, பொலனறுவை மாவட்ட சுதந்திரக் கட்சி இளைஞர் அமைப்பின் செயலாளராக மைத்திரிபால சிறிசேனவை நியமனம் செய்திருந்தார்.

அரசியலில் பயணத்தை ஆரம்பித்த மைத்திரிபால சிறிசேன தற்போது இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாக பதவி வகித்துக்கொண்டிருக்கின்றார். 

இன்றைய தினம் அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பில் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத வழிபாட்டு வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாருடம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 65 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் அதேவேளை, தற்போது அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது 65 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவது விசேட அம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06