கூட்டறிக்கையில் உறுதியளிக்கப்பட்டவை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை 

Published By: Ponmalar

03 Sep, 2016 | 09:36 AM
image

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவுடன் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இணைந்து வெளியிட்ட கூட்­ட­றிக்­கையில் உறு­தி­வ­ழங்­கப்­பட்ட விட­யங்கள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என வட­மா­காண முத­லை­மச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் ஐ.நா செய­லாளர் நாய­கத்­திடம் நேரில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத்­தோடு நல்­லி­ணக்கம் தொடர்­பான பேசு­வ­தற்கு முன்­ன­தாக போர்க்­குற்ற விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் அவ­ரி­டத்தில் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் செய­லாளர் பான்கி மூனுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்­னேஸ்­வ­னுக்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று வெள்ளிக்­கி­ழமை யாழ். பொது­நூ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இச்­சந்­திப்­பின்­போது வடக்கு முதல்வர் சி.வி.விக்­னேஸ்­வரன் தலை­மையில் வட­மா­காண விவ­சாய அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன், மீன்­பிடி அமைச்சர் பா.டெனீஸ்­வரன், கல்வி அமைச்சர் த.குரு­கு­ல­ராஜா ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தார்கள்.

இச்­சந்­திப்பு குறித்து வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்வரன் கருத்து வெளியி­டு­கையில்,

ஐக்­கிய நாடுகள் பொதுச்­செ­ய­லாளர் நாய­கத்தை சுமார் ஒரு­மணி நேர காத்­தி­ருப்­புக்கு பின்­னரே சந்­திக்க நேர்ந்­தது. நாம் அவரை பார்ப்­ப­தற்­காக காத்­தி­ருந்த­போது அவ­ரு­டைய அலு­வ­லகர் ஒருவர் அவ­ருக்கு கைலாகு கொடுத்து விட்டு தாம­தப்­ப­டுத்­தாது விட்­டு­வி­டுங்கள் என என்­னி­டத்தில் கோரினார். அப்­போது மன­வ­ருத்­தத்தை தெரி­வித்தேன். அதன் பின்னர் ஆறு நிமி­டங்கள் ஐ.நா செய­லாளர் நாய­கத்தை சந்­திப்­ப­தற்­காக எமக்கு நேரம் ஒதுக்­கப்­பட்­டது. இறு­தித்­த­ரு­ணத்தில் இவ்­வாறு இடம்­பெ­று­வ­தற்­கான வாய்­புக்கள் ஏற்­ப­டலாம் என்­பதை நான் முன்­னரே அறிந்­தி­ருந்தேன்.

ஆகவே அர­சியல் கைதிகள், மீள்­கு­டி­யேற்றம், காண­ாமல்­போனோர் விடயம் உட்­பட அனைத்து விட­யங்கள் தொடர்­பா­கவும் விரி­வான விட­யங்­களை அவ­ரி­டத்தில் கைய­ளித்­தி­ருந்தேன். குறிப்­பாக காணாமல்போனோர் விட­யத்தில் சுமார் 4200பேரின் முழு­மை­யான விப­ரங்­கள், இரா­ணு­வத்­திடம், கடற்­ப­டை­யி­ன­ரிடம், விமான படை­யி­ன­ரிடம் உள்ள எமது மக்­க­ளுக்­குச்­சொந்­த­மான காணிகள், கட்­டங்கள் தொடர்­பான விட­யங்­களை புத்­தக வடிவில் அவ­ரி­டத்தில் கைய­ளித்­தி­ருந்தேன். இவ்­வாறு அனைத்து விட­யங்கள் தொடர்­பான விப­ரங்­களை அவ­ரி­டத்தில் கைய­ளித்து இவ்­வி­ட­யங்கள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு கடப்­பாடு உள்­ளது என்­பதை அவரின் கவ­னத்­திற்கு கொண்டு சென்­றுள்ளேன்.

யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் பான் கீ மூன் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்­த­போது மனித உரி­மைகள் சம்­பந்­த­மாக அனைத்து விட­யங்­க­ளையும் விசாரிப்பதாக அர­சாங்கம் அவ­ரி­டத்தில் குறிப்­பிட்­டி­ருந்­தது. ஆனால் தற்­போது வரையில் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் கூட நீக்­கப்­ப­டாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது என்­பது பாரிய குறை­பா­டாகும் என்­பதை அவ­ரி­ய­டத்தில் நான் குறிப்­பிட்டேன்.

போர்க்­குற்­றங்கள் தொடர்­பான விசா­ரணை செய்­வ­தற்­கான பொறி­முயை இன்­னமும் முன்­னெ­டுத்­துச்­செல்­லப்­ப­ட­வில்லை என்­பதை எடுத்­துக்­கூ­றினேன். நல்­லி­ணக்­கத்­திற்­காக பாரி­ய­ளவில் பணம் செல­வி­ட­ப்­போ­வ­தாகவும் உலக நாடுகள் அதற்­கான உத­வி­களை வழங்­கு­வ­தற்கு தயா­ரா­க­வி­ருப்­ப­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றி­ருக்­கையில், போர்க்­குற்ற விசா­ர­ணையை முறை­யாக முன்­னெ­டுக்­காத நிலையில் எவ்­வாறு நல்­லி­ணக்க பொறி­மு­றையை முறை­யாக முன்­னெ­டுக்­கப்­போ­கின்றோம். குறிப்­பாக ஒரு இலட்­சத்­திற்கும் அதி­க­மான இரா­ணு­வத்­தினர் வட­மா­க­ணத்தில் இருக்­கின்­றார்கள். போரினால் பாதிக்­க­பட்ட மக்­க­ளுக்கு எவ்­வி­த­மான நன்­மை­யான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. காணா­மல்­போனோர் தொடர்பில் பிரச்­சி­னை­ நீ­டிக்­கின்­றது. சிறையில் எத்­த­னையோ பேர் வாடிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவ்­வா­றான நிலையில் எவ்­வாறு நல்­லி­ணக்­கத்தை எற்­ப­டுத்­தப்­ப­டப்­போ­கின்­றீர்கள். ஆகவே முதலில் போர்க்­குற்ற விசா­ர­ணையை முறை­யாக மேற்­கொண்டால் அதன் பின்னர் மக்கள் மனதில் நம்­பிக்­கை­யொன்று ஏற்­படும். அகவே அது தொடர்பில் உடன் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் என வலி­யு­றுத்­தினேன்.

ஐக்­கிய நாடுகள் சபை, ஆசிய அபி­வி­ருத்தி வங்கி, உலக வங்கி, ஐரோப்பி ஒன்­றியம் ஆகி­ய­வற்­றுடன் இணைந்து வட­மா­காண மக்­களின் தேவைகள் குறித்த கணிப்­பீ­டொன்றை மேற்­கொள்­ள­வேண்­டு­மென கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. ஆகவே அதனை முன்­னெ­டுத்­துச்­சென்று உட­ன­டி­யா­க­மேற்­கொள்­வதன் ஊடா­கவே வடக்கு மாகா­ணத்­திற்­கான திட்­ட­மொன்றை வகுக்க முடியும் அதற்கு முழு­மை­யான உத­வி­களை வழங்­வேண்டும் என்­ப­தையும் அவ­ரி­டத்தில் எடுத்­து­ரைத்தேன்.

அதே­போன்று வட­மா­காண மக்­களின் உட­ன­டித்­தே­வை­களை நிறை­வேற்­று­வது தொடர்­பா­கவும் அவ­ரு­டைய கவ­னத்­திற்கு கொண்­டு­சென்றேன்.

இவ்­வி­ட­யங்­களை கேட்­டுக்­கொண்ட ஐ.நா செய­லாளர் தனது பதிலில், பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­படும் என கடந்­த­முறை தான் வருகை தந்­த­போது கூறப்­பட்­போதும் தற்­போது வரையில் அச்­சட்டம் நீடித்­துக்­கொண்­டி­ருப்­பது தவ­றா­னது. ஆகவே அச்­சட்டம் உடன் நீக்­கப்­ப­ட­வேண்டும். அச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் அச்­சட்டம் நீக்­கப்­பட்ட பின்னர் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டு­மென அர­சாங்­கத்­தி­டத்தில் குறிப்­பிட்­டுள்­ள­தாக தெரி­வித்தார்.

போர்க்­குற்ற விசா­ரணை முன்­னெ­டுக்­கின்­ற­போது அதனை பாதிக்­கப்­பட்ட மக்கள் ஏற்­றுக்­கொள்­கின்ற விதத்தில் பொறி­மு­றைகள் அமை­ய­வேண்டும். அது குறித்து உத­வி­களை வழங்­கு­வ­தற்கு ஐ.நா. சபை தயா­ரா­க­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

சுமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்­பதல் தொடர்­பான விட­யத்தில் கருத்­து­ரைத்த ஐ.நா.செய­லாளர் இம்­மாதம் 21ஆம் திகதி இத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­காக உலக நாடுகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் இணைத்தலைவராக இருக்கும் வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இத்திட்டத்திற்காக கிடைக்கும் நிதி தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பார். அதன்போது தான் எமது மக்களின் தேவைகள் தொடர்பாக கூறி நிதியைப் பெற்றுக்கொடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு எதிர்வரும் நான்கு மாத காலப்பகுதியில் தன்னுடைய பதவிக்காலம் நிறைவடைந்தாலும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக தனது செயற்பாடுகளை பொறுப்புடன் முன்னெடுக்குமென உறுதியளித்தார்.

மேலும் பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு அவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் கவனமெடுக்கவேண்டுமென அவரிடத்தில் கோரிக்கை விடுத்திருந்தேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34