அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையிலான சட்டங்களை விதிக்க அதிகாரம் இல்லை: ஐ.தே.க

Published By: J.G.Stephan

10 Jul, 2021 | 01:34 PM
image

(நா.தனுஜா)
தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரம் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உள்ளது. இருப்பினும் நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையிலான சட்டங்களை விதிப்பதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சட்டத்தை மீறிச்செயற்படுவதற்கான அதிகாரம் எந்தவொரு நபருக்கும் இல்லை. தற்போதைய சுகாதார நெருக்கடி நிலைமையின் கீழ் பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரம் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உள்ளது. இருப்பினும் நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையிலான சட்டங்களை விதிப்பதற்கோ அல்லது தற்போது நடைமுறையிலிருக்கும் சட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ அவருக்கு அதிகாரம் இல்லை.

இருப்பினும் அண்மையில் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு பொலிஸாரால் வெளியிடப்பட்ட பணிப்புரையானது அரசியலமைப்பின் ஊடாக நாட்டுமக்களுக்கு வழங்கப்பட்ட கருத்துச்சுதந்திரத்தைப் பறிப்பதாகவே அமைந்துள்ளது. அந்தப் பணிப்புரையைப் பயன்படுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களைப் பொலிஸார் கைது செய்யும் நிலையொன்று உருவாகியிருக்கிறது.

தனிமைப்படுத்தல் சட்டத்தின்படி மிகவும் நெருக்கமான தொடர்புகளைப் பேணிவர்களை மாத்திரமே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களோ அல்லது அவர்கள் போராட்டத்தின்போது நெருக்கமாகச் செயற்பட்டமையோ கண்டறியப்படவில்லை. அவ்வாறிருக்கையிலேயே இலங்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினரைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறு செயற்படும் பொலிஸார் தயானந்த லியனகேவின் வழக்கை நினைவில்கொள்ளவேண்டும். அவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, எந்தவொரு தரப்பினரால் எத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும் அது சட்டத்திற்கமைவானதா என்பதைப் பொலிஸார் மனதிலிருத்திச்செயற்பட வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04