வடக்கு மக்களை ஜெனிவாவுக்கு தள்ளிவிடாமல், வீட்டு வசதி கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்: இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

Published By: J.G.Stephan

10 Jul, 2021 | 10:18 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
வடக்கு மக்களின் வீட்டுத்திட்ட கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும். மாறாக இதனை அரசியலாக்கி அவர்களை ஜெனிவாவுக்கு தள்ளிவிடக்கூடாது. வசதி குறைந்த மக்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலேயே வீடமைப்பு அதிகாரசபை ஆரம்பிக்கப்பட்டது என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வசதிகுறைந்த மக்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கிலே 1979இல் வீடமைப்பு அதிகாரசபை அமைக்கப்பட்டது. நாட்டில் எந்த பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்களாக இருந்தாலும் அவர்கள் யார், எந்த இனம், கட்சி என பார்க்காமலே இந்த துறையை மேற்கொள்ளவேண்டும். அந்த வகையில் வடக்கில் வீடமைப்பு திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது, யுத்தத்தால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களும் அநாதரவான குடுங்களுமாகும்.

அங்கு கட்டப்பட்ட தங்களின் வீடுகள் பூரணப்படுத்தப்படாமல் இருப்பதால், அதனை பூரணப்படுத்தி தரவேண்டும். அதற்காக வழங்கப்பட்டுவந்த அவர்களுக்கான கடன் கொடுப்பனவு வசதிகளை அரசாங்கம் நிறுத்தி இருக்கின்றது. அதனை வழங்கவேண்டும் என்பது அவர்களின் நியாயமான கோரிக்கையாகும்.

மேலும் இந்த மக்களின் நியாயமாக கோரிக்கைகளை அந்த மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் முன்வைக்கின்றபோது, அதனை  அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும். மாறாக குறுகிய அரசியலுக்காக இன,மத, அரசியல் வேறுபாடுகளைக்காட்டி, அவர்களை ஜெனிவாவுக்கு தள்ளிவிடக்கூடாது, நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம், இலங்கையர்கள் என்றே பார்க்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் எமது நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியாது.

அத்துடன் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்து வடக்கில் 5மாவட்டங்களில் 76ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க 480 முன்மாதிரி வீட்டுத்திட்டங்களை அமைத்திருந்தார். இது வரலாற்றில் முதல் தடவையாக இடம் பெற்றதாகும். அதனால் வீடமைப்பு திட்டங்களை ஏற்படுத்தி, அதற்கு பயனாளிகளை தெரிவு செய்யும்போது, அரசியல், கட்சி பேதங்களை பார்க்காது மேற்கொள்ள நடவடிக்கை எடு்க்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56