2021 Zero Chance Stories குறுந்திரைப்படப் போட்டியின் வெற்றியாளர்களின் விபரம் 

Published By: Digital Desk 4

09 Jul, 2021 | 07:36 PM
image

2021 Zero Chance Stories குறுந்திரைப்படப் போட்டியின் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. சட்டவிரோதமாக படகு மூலம் பயணிப்பதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் இப்போட்டியில் பங்குபற்றிய திரைப்படங்கள் மூலம் சிறந்த முறையில் மக்களுக்கு எடுத்துரைத்துரைக்கப்பட்டன.

சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்தல் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான ஆபத்துகளையும் விளைவுகளையும் ஆக்கபூர்வமாக மக்களிடையே கொண்டு செல்வதற்கு குறுந்திரைப்படங்கள் மிகச் சிறந்த ஊடகம் ஆகும் என்று அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை கட்டளை அதிகாரி, ரியர் அட்மிரல் ஹில் RAN கூறினார்.

2021 குறுந்திரைப்படப் போட்டியானது பெரும் வெற்றியைப் பெற்றதோடு போட்டியாளர்களிடையேயும் மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்போட்டியில் அடையாளம் காணப்பட்ட சிறந்த குறுந்திரைப்படங்கள் “சட்டவிரோதமாக அவுஸ்திலியாவில் குடியேற வாய்ப்பே இல்லை, எனும் தற்போதைய விழிப்புணர்வு செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படவுள்ளன.

இந்த செயற்திட்டம் ஆஸ்திரேலியாவின் வலுவான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்கள் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடவும், ஆபத்தான பயணத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதை தடுக்கவும் முயற்சிக்கின்றது.

‘மக்கள் ஆட் கடத்தல்காரர்களின் பொய்களில் சிக்கிக் கொள்ளாதிருக்கவும், கடலில் தங்கள் உயிரை பணயம் வைக்காதிருக்கவும், சட்டவிரோதமாக படகு மூலம் குடியேற முயற்சிப்பதால் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றி நாம் தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்துவது மிகவும் அவசியம் ஆகும் இதைச் செய்வதற்கு இந்தப் போட்டி எங்களுக்கு சிறந்த தளமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட படங்கள் மிகச் சிறப்பானவை.’ என்று ரியர் அட்மிரல் ஹில் கூறினார்.

“ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக கடல் மூலம் குடியேறல், என்ற கருப்பொருளில் திரைப்பட தயாரிப்பாளர்களின் சிறந்த படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டதற்கான அறிவித்தல் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் 3 வெற்றியாளர்களின் விபரங்கள் பின்வருமாறு,

முதலாம் இடம் : கே. பிரபு - துண்டு பிரசுரம்

இரண்டாம் இடம் : எஸ்.எஸ்.கேமல்; - ரோலர்

மூன்றாம் இடம் : கே. கிஷாந்த் - ஜீரோ

முதலாவது பரிசாக முழுமையான படப்பிடிப்பு கேமரா உபகரணங்களும், இரண்டாவது பரிசாக ட்ரோன் கேமராவும்,மூன்றாவது பரிசாக Go Pro Action கேமராவும்,சிறந்த 10 படைப்புகளுக்கு பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

2021 Zero Chance Storiesகுறும்படப் போட்டிக்கான படைப்புகள் 2020ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சிங்களம் மற்றும் தமிழ்  மொழிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் .றுதிப் போட்டியாளர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினரால்  வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05