பின் கதவால் சென்ற பான்கிமூன்

Published By: Raam

02 Sep, 2016 | 10:13 PM
image

(ஆர்.ராம், எம்.நியூட்டன், ரி.விரூஷன்)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பான்கிமூன் பொது நூலகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரையும் வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான குழவினரையும் தனித்தனியாக சந்தித்த பின்னர் பின்கதவால் வெளியேறிச் சென்றுள்ளார். 

இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த பான்கிமூன் முதலில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரேயை சந்திப்பதற்கு ஏற்பாடாகி இருந்தது. அதற்கமைய அவர் ஆளுநரின் அலுவலகம் நோக்கி சென்ற சமயத்தில் ஆளுநர் அலுவலகம் முன்னால் பாரிய கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததது. இதனால் மாவட்டச் செயலகத்திற்கு எதிராக அமைந்தள்ள ஆளுநரின் அலுவலகத்தினுடைய பிரதான வாயிலினூடாக செல்வதை தவிர்த்த பான்கிமூன் பழைய பூங்காவீதி ஊடாக ஆளுநர் அலுவலகத்திற்குச் செல்லும் பிறிதொரு வாயிலினூடாக சென்றிருந்தார். 

அதேநேரம் யாழ்.பொதுநூலகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினரைச் சந்திப்பதற்கு வருகை தந்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகம் நூலகத்தின் பிரதான வாயிலினூடாகவே உட்பிரவேசித்தார். எனினும் சந்திப்புக்கள் நிறைவடைந்ததன் பின்னரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பிரதானவாயிலை அண்மித்து கோஷம் எழுப்பியவாறு இருந்ததன் காரணத்தால் பிரதான வாயிலூடாக வெளியேறுவதைத் தவிர்த்த ஐ.நா செயலாளர் நாயகம் பின்வாயிலால் வெளியேறிச் சென்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08